உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!

வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பல மாநிலங்களில் முறையாக நடக்கவில்லை. எனவே தான் தேர்தல் கமிஷன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் முறையாக நடக்க வேண்டும்,'' என, திருப்புவனத்தில் காங்., - எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 63 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரேத பரிசோதனை கூடம் கட்டடம் ராஜ்யசபா எம்.பி., ப.சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின், கார்த்தி எம்.பி., கூறியதாவது:கோவை மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீசார் மென்மையாக நடந்து கொள்வது சரியல்ல. இப்படித்தான், அண்ணா பல்கலை மாணவி பாதிக்கப்பட்ட போதும் நடந்து கொண்டனர். இனி அப்படி இருக்கக் கூடாது.தமிழகம் முழுதும் யாரெல்லாம் ரவுடிகள் என கணக்கெடுக்க வேண்டும். அவர்களை, தொடர்ச்சியாக போலீசார் கண்காணிக்க வேண்டும். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், போலீசார் குற்றவாளிகள் மீது பெரிய அளவில் அதிரடி ஆப்பரேஷன் நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் கூலிப்படையாக செயல்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம், பல மாநிலங்களில் முறையாக நடக்கவில்லை. எனவே, தான் தேர்தல் கமிஷன் மீது, அனைவருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவசர கதியில் அதை செய்யக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

MARUTHU PANDIAR
நவ 05, 2025 10:57

உங்கப்பாரு ரீ ஈ ஈ ஈ கவுன்டு மூலம் ஜெயிச்சு இல்ல மந்திரி ஆனாரு? அப்போது மட்டும் தான் எல்லாம் பர்பெக்ட் ஆகா இருந்துதா?


G Mahalingam
நவ 05, 2025 10:41

இப்போது முதன் முதலில் பீகாரில் மட்டுமே நடை பெற்றது.‌ ஆனால் பல மாநிலங்களில் நடைபெற்றது போல பொய்யான தகவலை தரும் பாராளுமன்ற உறுப்பினர்


Naga Subramanian
நவ 05, 2025 10:35

தனக்கு சாதகமாக யார் இருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டிருக்கும் ஒரு அரசியல் பச்சோந்தி.


Rajasekar Jayaraman
நவ 05, 2025 10:31

ஜாமீனில் உள்ள குற்றவாளி தேர்தல் ஆணையத்தை குறை சொல்கிறான்.


kjpkh
நவ 05, 2025 10:27

அப்படி என்றால் வாக்காளர் திருத்தம் வேலை முடிந்த பிறகு தேர்தலை வைத்துக் கொள்ளலாம். இப்போதுள்ள வாக்காளர் பட்டியல் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. திருத்தம் கண்டிப்பாக வேண்டும்.


Venugopal, S
நவ 05, 2025 09:53

அப்போ தான் நீ உங்க அப்பா ஜெயிக்க முடியும். தில்லுமுல்லு செய்வது நீங்க, ஒட்டு திருட்டுப் பற்றி பேசுவது நீங்க...


veeramani
நவ 05, 2025 09:44

தேர்தல் இருத்தனாகில் பனி நேற்று தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குள் தேர்தல் திருத்தம் பற்றி ஒரு மக்கள் பிரதிநிதி கருத்து கூறுகிறார். கார்த்தி , பாராளுமன்ற உறுப்பினர். அவர் தில்லிக்கே சரியாக போவதில்லை. இதில் தேர்தல் கமிஷன் பற்றி புகார். இந்தியாவில் கடுமையான சட்டம் இயற்றவேண்டும். எந்த ஒரு இந்திய குடிமகனின் மெது காவல்துறை வருமானவரி ED வழக்குகள் இல்லையோ அவர்களே எந்த தேர்தலிலும் போட்டியிட தகுதியானவர்கள். இதனால் அரசிற்கு தேர்தல் சிலவுகள் குறையலாம்


GMM
நவ 05, 2025 09:25

வீடு தேடி பிறப்பு இறப்பு சான்று கொடுப்பது இல்லை. பட்டா, சிட்டா கொடுப்பது இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் திருத்தம் செய்ய இலவசமாக வீடு தேடி வந்தால் முறையாக நடக்கவில்லை என்று 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணைய சான்று பெற்ற கார்த்திக் சிதம்பரம் எம்.பி. புகார் . வாக்கு சாவடி அருகில் குடியிருக்கும் நபருக்கு திருத்தம் எளிது. இறந்தவர், இடம் மாறியும், மறைந்து வாழ வேண்டிய நபருக்கு சிரமம் தான். பத்திர பதிவில் இரு சாட்சி போல் ஒவ்வொரு வாக்காளர் மூத்த குடிமக்கள் இருவரால் அடையாள படுத்த வேண்டும்.


சாமானியன்
நவ 05, 2025 09:14

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. யாராவது வழக்கு தொடரலாம்.


shyamnats
நவ 05, 2025 08:44

வாக்காளர் திருத்த செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் / எதிர்ப்பவர்கள் அனைவருமே சந்தேக படவேண்டிய நபர்களே. கார்த்தி வெற்றி பெற்றதையே அந்த காலத்தில் அனைவரும் சந்தேக கண்ணோடுதான் விமரிசித்தார்கள் தேர்தல் கமிஷனும் இந்த திருத்தும் முறையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். .


Suppan
நவ 05, 2025 17:13

எல்லா கட்சிகளைசேர்ந்த பூத் முகவர்களும் /கட்சி பிரதிநிதிகளும் உடன் இருப்பார்களே ? அவர்கள் இது நம்பிக்கை இல்லையா?


புதிய வீடியோ