ஓட்டு மிஷின் உடைப்பு
கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே, பூத் ஏஜென்டுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உடைத்த சுயேச்சை வேட்பாளரின் முகவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். உடைக்கப்பட்ட இயந்திரத்தில், 208 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதை கணக்கில் எடுத்துக் கொண்டு, புதிய இயந்திரம் வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது.