உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரகுபதியை பதவியில் இருந்து நீக்க வி.பி.துரைசாமி வலியுறுத்தல்

ரகுபதியை பதவியில் இருந்து நீக்க வி.பி.துரைசாமி வலியுறுத்தல்

சென்னை:தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அறிக்கை:அமைச்சர் ரகுபதி, குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராடும், வழக்கறிஞர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது, கண்டனத்திற்கு உரியது. அவரது செயல், கூட்டாட்சி தத்துவத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து, கவர்னர் நீக்க வேண்டும். பார்லிமென்டில் சட்ட மசோதா தாக்கல் அறிமுகம் செய்தபோது, தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, தி.மு.க., - எம்.பி.,க்கள் எடுத்து வைத்த வாதங்கள் என்ன; குற்றவியல் சட்ட திருத்தம், சாட்சி சட்டம், குற்றவியல் நடை முறை சட்ட திருத்தங்களால், வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்புகள் வழங்க முடியும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில், கடுமையான தண்டனைகள் வழங்க முடியும். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் குற்றத்திற்கு, தண்டனை கடுமையாக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற காவலை, 15 தினங்களில் இருந்து, 90 நாட்கள் வரை நீடிக்க முடியும். அமைச்சர் ரகுபதி கருத்தை, தமிழக பா.ஜ., கடுமையாக எதிர்க்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை