உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெக்ஸ்ட் தேர்வு வேண்டுமா? கருத்து தெரிவிக்க அழைப்பு!

நெக்ஸ்ட் தேர்வு வேண்டுமா? கருத்து தெரிவிக்க அழைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மருத்துவ படிப்புகளுக்கான, 'நெக்ஸ்ட்' தகுதி தேர்வை அமல்படுத்துவது குறித்த கருத்துகள், ஆட்சேபனைகளை பிப்., 7ம் தேதிக்குள் அளிக்கலாம்' என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'நெக்ஸ்ட்' என்ற தேசிய தகுதி தேர்வை நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uqpsagsv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள் 'நெக்ஸ்ட் -- 1' தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். மருத்துவ படிப்பை நிறைவு செய்த பின், 'நெக்ஸ்ட் - 2' தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவை அளிக்கவும் முடியும்.அதேபோல், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர், இந்தியாவில் மருத்துவ சேவை அளிக்க, நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.இந்த தேர்வு முறையால், மருத்துவ மாணவர்களின் பயிற்சித் திறன் பாதிக்கப்படும் என, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தேர்வு நடைமுறை, மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.தற்போது, துறை சார்ந்தவர்களின் கருத்து கேட்கும் பணியில் மருத்துவ ஆணையம் ஈடுபட்டு உள்ளது.இது குறித்து, ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு துறை செயலர் ஸ்ரீநிதி வெளியிட்ட அறிவிப்பு:நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவது குறித்தும், ஆயத்தமாவது குறித்தும் ஆய்வு செய்ய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, நெக்ஸ்ட் தேர்வு குறித்து மருத்துவ துறையினர் மற்றும் மக்களிடம் கருத்துகளை கேட்கிறது. https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1EEfqcnkZVnjt3p_QFcqJTqzltscsloHqKFfw7yw-vy-CXg/viewform என்ற இணைய தளத்தில் கருத்து தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

raja
ஜன 30, 2024 07:50

இந்திய மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவற்களின் ஒவ்வொரு பருவ தேர்வையும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தி சான்றிதழ் கொடுக்கலாம் ... அயல் நாட்டில் படித்தவர்களுக்கு மட்டும் தனி தகுதி தேர்வு நடத்தலாம்...


LAX
ஜன 30, 2024 00:52

இணையதள முகவரி - வாசித்ததில் பிடித்தது.. ????


Ramesh Sargam
ஜன 30, 2024 00:31

'நெக்ஸ்ட்' தகுதி தேர்வை ஒழிப்போம் என்று அந்த உதவா நிதி உடனே கிளம்பிடப்போறான்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ