உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எச்சரிக்கை! 25 தமிழக மாவட்டங்களில் கனமழை... இன்று முதல் 3 நாட்கள் புரட்டிப்போடும்

எச்சரிக்கை! 25 தமிழக மாவட்டங்களில் கனமழை... இன்று முதல் 3 நாட்கள் புரட்டிப்போடும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டல சுழற்சிகளால், தமிழகத்தில், 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை புரட்டி போடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அங்கேயே தொடர்கிறது.இன்று அது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய அரபிக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம்.

கீழடுக்கு சுழற்சி

இந்தச் சூழலில், தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், தனித்தனி வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுகின்றன. அரபிக்கடல் நிகழ்வு காரணமாக, இந்த சுழற்சிகள் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளன. அதேநேரத்தில், இந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகை பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் இணையும் பகுதியிலும், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தில், நாளை இங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான சூழல் நிலவுகிறது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தென்மேற்கு பருவக்காற்று விலகி வரும் சூழலில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடைவது, வடகிழக்கு பருவ மழையின் துவக்கமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்பின்னணியில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது, 15ம் தேதி வரை நீடிக்கும்.

இன்று கன மழை

திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்.

நாளை மழை கொட்டும்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலுார், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.

15ல் கன மழை

கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை

'ஆரஞ்ச் அலர்ட்'

நாளை விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கும், 15ல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், 11 முதல், 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகளில், 16ம் தேதி வரை மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை

ஓரிரு நாட்களில் துவங்கும் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் வாயிலாக, வடகிழக்கு பருவமழை அடுத்த ஓரிரு நாட்களில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, தமிழக வெதர்மேன் உள்ளிட்ட தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில், தென்மேற்கு பருவக் காற்று படிப்படியாக விலகி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையில், குறிப்பிட்ட தேதிகளுக்கு முன்னதாகவே, பல இடங்களில் பருவக் காற்று வேகமாக விலகி வருகிறது. இந்த சமயத்தில், அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் சின்னமாக வலுடைந்தும் வருகிறது. மேலும், வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவக்காற்று தென் மாநிலங்களில் விலகும் போது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது, வடகிழக்கு பருவ மழையின் துவக்கமாக அமையும். எனவே, தற்போதைய சூழலில், அடுத்த ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழையின் துவக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏரி நீர் வெளியேற்றம்

நிவாரண முகாம் தயார்கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை நீர்நிலைகளில் உள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கி உள்ளது.சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஓரிரு நாட்களில் அதிக கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, 15ம் தேதி முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளில் உள்ள நீரை வெளியேற்றினால் தான், மழையால் அதில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும். அதன்படி, அம்பத்துார் ஏரியில், 126 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றப்பட்டு, 70 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நிவாரண முகாம் மையங்களை தயார்ப்படுத்தும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டை மண்டலம், சி.ஐ.டி.நகர், மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் உள்ள நிவாரண முகாமில், உணவு தயாரிக்கும் சமையலறையை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், நேற்று ஆய்வு செய்தார். வட்டார துணை கமிஷனர் பிரவீன்குமார், தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

நீர்நிலைகள் குறித்து

தினமும் 'அப்டேட்'நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, அரசுக்கு அறிக்கை தருவதற்கு வசதியாக, சில நடவடிக்கைகளை, நீர்வளத்துறை எடுத்துள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை முடியும் வரை, அவசர காரணங்களை தவிர, நீர்வளத் துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பணிபுரியும் மாவட்டங்களை விட்டு, மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றும் நீர் விபரங்களை, ஒரு நாளைக்கு நான்கு முறை, முதல்வர், தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ