உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், பொது மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த, 24 மணி நேரத்தில், கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக அதிகன மழை பெய்ய உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ