உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஜூலை 31, 2024 21:02

இந்த மதமாற்ற கும்பல் தலைவனை பிடித்து உள்ளே போடுங்கள் .


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2024 18:56

திமுக கூட்டணியில் தொடர்ந்தால், செந்தில் பாலாஜி கதை தான் திருமாவிற்கு நடக்கும்.


Kanns
ஜூலை 31, 2024 18:42

23yrs Too Much Time. Proves How Justice is Bought by Dreaded Criminal Conspirators Roaming Freely as PseudoLeaders Fanning AntiPeopleUnity CasteistFanaticism Rowdyism. Encounter All Casteist RowdyGangster Politicians


M Ramachandran
ஜூலை 31, 2024 18:18

பிரதமரோ ஜனாதிபதியோ ஆக முடிய வில்லை . அவ்வளவு தான். இன்னும் அந்தா ஆசை வேறா. அவ்வளவு தான் இந்தியா என்னும் நாட்டை உலக வரை படத்திலிருந்தது காண முடியாது. விற்று ஸ்வாகா செய்து அயல் நாட்டில் குவித்து அந்த குடும்பம் மக்கள நிந்தித்தாலும் பரவா இல்லை நிதி நிதி என்று மக்களை வாட்டி வதைத்து வரி என்ற விலை ஏற்றத்தையையும் மக்கள் தலையில் ஏற்றி சொந்தங்கள் தழைத்து வாழ குடிக்காரர்களாக்கி ஆட்சியை நடத்த தான்...


என்றும் இந்தியன்
ஜூலை 31, 2024 17:57

ஆகவே இதனால் தெரிவது என்னவென்றால் சாதாரண மக்கள் என்றால் பின்னிருந்து வாயு விட்டாலும் சுற்றுப்புறம் சுத்தமாகி விட்டது என்று கைது செய்யும் காவல் துறை அதற்கு கொடிய தண்டனை என்று தீர்வு கொடுக்கும் நீதிமன்றம் . அதுவே ஒரு எம் எல் ஏ எம்பி காங்கிரஸ் திமுக திரிணாமுல் காங்கிரஸ் என்றால் ஆளுங்கட்சியாக இருக்கும் போது காவல் துறை கைது செய்யாது நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு சொல்லவே சொல்லாது. 20 வருடம் கழித்து திடீரென்று நீதிமன்றம் விழித்துக்கொள்ளும்என்று இந்த மற்றும் ஜெயலலிதா .......... பலப்பல அரசியல் வியாதிகள் வழக்குக்குகளின் மூலம் அதன் தீர்வின் மூலம் தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது


konanki
ஜூலை 31, 2024 15:59

சூப்பர் என்ன வேகம்என்ன வேகம் மின்னல் வேகத்தை யே பீட் பண்ணும் அளவுக்கு வேகமான நடவடிக்கை இந்த வேகத்தை என்ன பேர் சொல்லி பாராட்டுவது? வாசகர் கள் "மின்னல் வேகம்" என்பது போல பெயர் கண்டு பிடித்து எழுதினால் பாராட்ட வசதியாக இருக்கும்.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 31, 2024 15:42

ஜாதி மதம் வைத்து நிறையபேர் கட்ட பஞ்சாயத்து, அரசியல், ரவுடித்தனம் செய்கிறார்கள் சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் இந்தியா ....... வெட்கம் vrt


Siruthai
ஜூலை 31, 2024 15:33

அடங்க மறு அத்து மீறு


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 15:24

2003 ல நடந்ததுக்கு இப்பம் விசாரணையா ...... க்க்க்கிழிஞ்சுது போ .......


Ramani Venkatraman
ஜூலை 31, 2024 13:58

21 வருஷம் முன்னாடி நடந்ததுக்கு இப்ப பிடி வாரண்ட்....இப்ப நடக்கக் கூடியதுக்கு எல்லாம் 2045 ல தான் பிடி வாரண்ட் வரும்....எதுக்கும் கவலை வேண்டாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை