உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

சென்னை: '' தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா?'', என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு பொரியல். சண்டை என்றால் தனித்து தான் போட்டியிடுவேன்.கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம். நீங்கள் கொண்டாடினால்...நான் முதல்வர் ஆகிவிடுவேன். நீங்கள் கொண்டாடுவீர்களா... திண்டாடுவீர்களா... தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா?மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது செம்மொழி என அறிவித்ததால், செம்மொழி ஆனதா? தமிழ் செம்மொழி என அனைவரும் கூறுகின்றனர். நீங்கள் யார் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர வர்த்தகர்கள் மாநாட்டில், தமிழில் பெயர் எழுத சொல்லிவிட்டு ஆங்கில பெயரை அப்படியே தமிழில் எழுத சொல்கிறார் முதல்வர். அனைத்து கடைகளிலும் எழுத்து தமிழ் ஆக இருக்கும். உச்சரிப்பு ஆங்கிலம் ஆக இருக்கும். எழுத்து ஆங்கிலம் ஆக இருக்கும். உச்சரிப்பு தமிழ் ஆக இருக்கும். தமிழ்நாடு என பெயர் வைத்து மயங்க வைத்து மொத்தமாக முடித்துவிட்டீர்கள்.கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாள் என முதல்வர் அறிவித்தால், கட்சிக்காரர்கள் ஏற்பார்கள். மக்கள் ஏற்க மாட்டார்கள். மொழிக்காக உயிர்நீத்தவர் தாளமுத்து நடராஜன். தாளமுத்து நடராஜன் இறந்த நாளை செம்மொழி நாளாக வைக்க வேண்டும். அது தான் நடக்கும். நீங்கள் ஆசைக்கு அறிவிக்க வேண்டியதுதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

spr
ஜூன் 02, 2025 17:54

தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியிருந்தாலும், இனம் மதம் மொழி ஜாதி இவற்றால் மக்களை எளிதில் பிரித்தாள முடியும் என்றெண்ணிய திமுக அதனை தேர்தலுக்கான ஒரு கருவி என்று கையில் எடுக்காதவரை நம் தமிழகத்து சாஸ்திரிகளோ, பண்டிதர்களோ கலைஞர்களோ எவரும் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் உண்மை உலகறிய வைத்தது மத மாற்றம் செய்ய முயன்ற பிற நாட்டார் ஆனால் அதனை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதால் "ரெட் ஜெயன்ட், " "ரைசிங் ஸ்டார்" உதய சூரியன் என்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நிதி சேர்த்தும் திமுக "தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறது என்பதுவும் உண்மையே.


Kulandai kannan
ஜூன் 02, 2025 11:53

பச்சைத் தமிழனின் மொழிக்கு எதற்கு செந்நிறம்?


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 11:52

தமிழ் உட்பட எதிலிருந்தும் உருவாகாத சமஸ்கிருதம்தான் செம்மொழி. சமஸ்கிருதமென்றாலே செம்மையான மொழி எனப்பொருள். தமிழ் மிக்க இனிமையானது. ஆனால் கலப்படமற்றதா என்பது கேள்விக்குறியே. சங்க இலக்கியங்களில் கூட சமஸ்கிருத சொற்கள் உள்ளன. சங்கம், (லக்ஷ்யம்) இலக்கியம், (லக்ஷணம்) இலக்கணம் இவற்றின் வேர்ச்சொற்கள் சமஸ்கிருத வார்த்தைகளே. எந்தமொழியும் எதற்கும் தாழ்ந்ததில்லை. தமிழும் சமஸ்கிருதமும் நமது இரு கண்கள் போன்றவை. மொழிவெறி ஆபத்தில் விடும்.


ராஜா
ஜூன் 02, 2025 04:37

வடக்கன்ஸ் பிழைக்க வழி இல்லாமல் இங்க வந்து தான் தமிழ் படிச்சு கிட்டு தொழில் செய்து பிழைக்கிறான் , அப்புறம் பிழைக்க வழி இல்லாத மொழி எதுக்குன்னே !!!


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 10:53

தமிழன் கொஞ்சம் அட்வான்ஸ்டு. கூலி வேலைக்காக இலங்கை பிஜி மலேசியா சென்றார்கள். இப்போ கூட ஆமதாபாத்தில் தெருத்தெருவாக எடுத்துச் சென்று இட்லி விற்கிறார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 02, 2025 04:04

அதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள். திராவிடர்கள் சாராய வியாபாரம் மூலம் கள்ளத்தனமாக செமையாக சம்பாதித்தார்கள். உபதொழில்களாக போதை வஸ்துக்கள் விற்பது, விலை மாதுக்களுக்கு லட்சங்களில், நூறுக்கணக்கான கோடிகளில் வாட்ச் போன்ற இத்தியாதிகள் இதை நிரூபிக்கின்றன.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:20

கப்பம் செலுத்தும் எஜமான் சொல்லுகிறபடி ஆடும் திரள் நிதி திருடன் , பிரபாகரன் பேர் சொல்லி பிளக்கும் கோமாளி , பிஜேபி ஒரிஜினல் B டீம்


டில்லிகுமார்
ஜூன் 01, 2025 21:39

கருமொழியாவது.. செம்மொழியாவது. ஹிந்திதான் இப்போ டாப். படிக்கலேன்னா ரத்தம் கக்கி செத்தூப் பூடுவே.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:19

ஆமாம் பாணி பூரி ஹிந்தி வேணும்


மீனவ நண்பன்
ஜூன் 01, 2025 21:38

செம்மொழி என்று சொல்வதெல்லாம் கம்பி கட்டற கதை ..கல்லா கட்றது தான் பிரதானம்


rama adhavan
ஜூன் 01, 2025 20:50

1500-2000 ஆண்டுகளாக உள்ள, இலக்கியத்தில், மொழியில் சிறப்பான மொழிகளை மத்திய அரசு செம்மொழியாக அங்கீகாரம் தந்துள்ளது. முதல் செம்மொழி, 2004இல் தமிழ்.தற்பொழுது நம் நாட்டில் 11 செம்மொழிகள் உள்ளன. இதற்கான பெருமை அப்போது நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசுக்கே சாரும். ஆளும் கட்சிக்கு அல்ல.


Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:26

செம்மொழியாக இருந்த தமிழ் மொழியை சீரழிக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சி ஒழியவேண்டும். தமிழ் மொழி வளரவேண்டும்.


ramesh
ஜூன் 01, 2025 21:23

வழக்கமா சமஸ்கிருதம் வாழவேண்டும் .தமிழ் அழியவேண்டும் என்று தானே நீங்கள் கூப்பாடு போடுவீர்கள்


முக்கிய வீடியோ