உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொங்கலுக்கு பிறகு பாருங்கள் புதிர் போடுகிறார் செங்கோட்டையன்

 பொங்கலுக்கு பிறகு பாருங்கள் புதிர் போடுகிறார் செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சட்டசபை தேர்தல் கூட்டணி முடிவை, விஜய் தான் எடுப்பார். பொங்கலுக்குப் பின், தமிழகத்தில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பதை பாருங்கள்,'' என, த.வெ.க., நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: ஈரோடில் நடந்த விஜய் பிரசார கூட்ட நிகழ்ச்சி, தமிழகம் மட்டும் இன்றி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த நிகழ்ச்சி குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும். வரும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும், த.வெ.க., தலைவர் விஜய் தான் எடுப்பார். வரும் பொங்கலுக்குப் பின், தமிழகத்தில் என்னென்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பதை நீங்கள் காணப் போகிறீர்கள். மாற்றுக் கட்சிகளில் இருந்து, எங்கள் கட்சிக்கு இன்னும் நிறைய பேர் வர உள்ளனர்; எங்களோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் த.வெ.க.,வில் சேரும் நிகழ்வு விரைவில் நடக்கும். வி.சி., தலைவர் திருமாவளவன் என்ன வேண்டுமானாலும் பேசுவார். அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்கள் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறோம். அதனால், அடுத்த கட்சிகள் என்ன செய்கின்றன என்பது குறித்த சிந்தனை எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை த.வெ.க.,வால் மட்டுமே வழங்க முடியும். தி.மு.க., அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு த.வெ.க.,வில் இணைந்தேன்; அதனால், தி.மு.க.,வின் 'பி டீம்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், என்னை விமர்சிக்கிறார். அவர், உண்மையான பா.ஜ.,காரராக செயல்படவில்லை. அ.தி.மு.க., காரராகவே இருக்கிறார். அதனால், அவர்தான் அ.தி.மு.க.,வின் 'பி டீம்!' அவர், பா.ஜ.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V RAMASWAMY
டிச 21, 2025 10:22

ஒரு புலி எலியைத் தலைமையாக ஏற்றால் எப்படியிருக்கும்?


SENTHILKUMAR
டிச 21, 2025 08:21

10 நாட்கள் கெடு... ஒருங்கிணைப்போடு .. இப்பொ பொங்கல்.. அடே அடே ...


மோகனசுந்தரம்
டிச 21, 2025 06:40

திரு செங்கோட்டையன் அவர்கள் நயினாரைப் பற்றி சரியாக குறிப்பிட்டுள்ளார். அவர் முழுவதுமாக அண்ணா திமுகவில் இணைந்து விடுவது அவருக்கும் நல்லது பிஜேபிக்கும் நல்லது.


Chandhra Mouleeswaran MK
டிச 21, 2025 05:35

அ - அ - ஆம்மாங்ணா பொங்கலுக்குப் பின்னாடி கிட்னாவரத்து லிங்கி வேட்டி டர்ர்ருன்னு கிளிஞ்சிரும் எம்ச்சியாரு கையால கெட்டாக் குட்டிச் செவுரு அங்கிருந்து வந்தது அஞ்சயேதான போயாகணும்? இனம் இனததோட


ramani
டிச 21, 2025 05:11

என்ன கூத்தாடி கட்சியை கலைத்து விடுவானா அல்லது நீங்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக போகிறீர்களா


naranam
டிச 21, 2025 04:04

பன்னீர் மற்றும் பழனியின் ஆணவப் போக்கால் செங்கோட்டையன் ஒரு பாழடைந்த கோட்டையாகி விட்டார்.


முக்கிய வீடியோ