கல்லணை அருகே தண்ணீர் மாநாடு
தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை இயற்கை அளவில்லாமல் நமக்குக் கொடுத்து வருகிறது. ஆனால், அவற்றை முறையாக சேமித்து, கோடை காலங்களில் வறட்சி ஏற் படாமல் பாதுகாத்துக் கொள்ளும் அளவிலான நீர் மேலாண்மை திட்டம் நம்மிடம் இல்லை. நீரை தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கான அணைகளை, தொடர்ச்சியாக நாம் கட்டவில்லை. அதனால் தான், இயற்கை அருளும் தண்ணீர் கொடையை, அப்படியே கடலுக்கு அனுப்பி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான லிட்டர் அளவுள்ள தண்ணீரை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் பேசுவதற்காகத்தான், தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகில் உள்ள பூதலுாரில் தண்ணீர் மாநாட்டை, நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்த உள்ளோம். அம்மாநாட்டில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, காவிரி நதிநீர் சிக்கல், நன்னீர் பாதுகாப்பு மற்றும் நீர்வளப் பிரச்னைகள் குறித்து விவாதித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதே போன்று, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து மாநாடுகள் நடத்தப்படும். - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்