உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்வளத்துறை மானியக்கோரிக்கை; துரைமுருகன் vs இ.பி.எஸ்., காரசார விவாதம்

நீர்வளத்துறை மானியக்கோரிக்கை; துரைமுருகன் vs இ.பி.எஸ்., காரசார விவாதம்

சென்னை: நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது.சட்டசபையில் இன்று (மார்ச் 24) நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து வருகிறார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்: அண்டை மாநில முதல்வர்கள் அனைவரும் நெருக்கமாக இருக்கிறார்களே, நீங்கள் தண்ணீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாமா?இதற்கு துரைமுருகன் அளித்த பதில்: பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. பேச்சு வார்த்தை நடத்தினால் அத்தனை விவகாரங்களும் கெட்டுப்போகும். இனி பேசினால் பயன் இல்லை என்று முடிவெடுத்து உச்சநீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். உச்சநீதிமன்றம் தான் நமது உரிமைக்கு அளித்து சலுகை செய்து இருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு விஷயத்திற்கு உச்சநீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். இருவரும் பேச ஆரம்பித்தால் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் கூறிவிடும். மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின் போது, பேசிப்பாருங்கள் என கருணாநிதியிடம் அவர் தெரிவித்தார்.இனி பேச முடியாது என கருணாநிதி கூறியதால்தான், காவிரி தீர்ப்பாயம் நமக்கு கிடைத்தது. அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்வதால் பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை அவர்கள் தயார் செய்தனர். அதனை காவிரி ஆணையத்திலும் விவாதத்திற்கு முன்வைத்தனர். ஆனால், காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்டு திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது.கிடப்பில் போட்டது யார்?முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகமும் கேரளாவும் வழக்கு தொடர்ந்ததாகவும், 14 முறை 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நீங்கள் தொடங்கினீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதை கிடப்பில் போட எங்கள் தலைவர் விரும்பவில்லை. நிதி ஒதுக்கி அதை முடித்தோம். ஆனால், தாமிரபரணி-கருமேனி ஆற்றுத் திட்டத்தை நீங்கள் 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டீர்கள். நாங்கள் வந்து அதை முடித்தோம்,நாங்கள் மாற்றான் தாய் மனதுடன் செயல்படவில்லை. நீங்கள் தான் அப்படி செய்தீர்கள். காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் 22 வழக்குகளை தொடர்ந்துள்ளோம். இதன் மூலம் தமிழக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறோம். இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அதில் சந்தேகமில்லைஇதற்கிடையே, அமைச்சர் உட்கார்ந்து பதில் சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக சபாநாயகர் தெரிவித்தார்.துரைமுருகன்: உடல்நலக்குறைவால் இன்று அவைக்கு வர முடியுமா என நினைத்தேன். உட்கார்ந்து பேச அனுமதி அளித்ததற்கு நன்றி.சபாநாயகர் அப்பாவு: 100 ஆண்டு காலம் நோய் நொடியில்லாமல் நலமோடு இருப்பீர்கள்.துரைமுருகன்: அதில் ஒன்றும் சந்தேகமில்லை.இவ்வாறு உரையாடல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bhaskaran
மார் 24, 2025 18:25

துரை தாத்தா நித்ய கண்டம் பூர்ண ஆயுசு இன்னொருமுறை திமுக ஆட்சியில் வந்தால் தாத்தா மைச்சராகிஸ்டரெச்சரில் படுத்தபடி பதிலளிப்பார்


ஆரூர் ரங்
மார் 24, 2025 17:28

நதிநீர் இணைப்பை ராகுல் கடுமையாக எதிர்க்கிறார். மத்திய பிஜெபி அரசு கோதாவரி காவேரி நதிநீர் இணைப்பில் மும்முரமாக உள்ளது. அதனைக் கெடுப்பது தெலங்கானா காங்கிரஸ் முதல்வர்தான். இவர்களுடன்தான் திமுக கூட்டு சேர்ந்துள்ளது. இந்த துரையைப் பொறுத்தவரை வற்றிய ஆற்றில்தான் மணல் அள்ளமுடியும்.


ஆரூர் ரங்
மார் 24, 2025 17:24

கருணாநிதி காலத்தில் காவிரிப் பிரச்சினை தீரவில்லை. ஏனெனில் அதில் தீர்வு ஏற்படவேண்டும் என திமுக தலைவர் விரும்பவில்லை. அதனை வைத்து அரசியல் செய்து கொண்டே இருக்க வேண்டும். மக்கள் அறிவில்லாமல் ஏழைகளாக இருக்கும் வரைதான் ஏமாற்றி வாக்கு வாங்கலாம் என்ற கெட்ட எண்ணம் மிகுந்தவர். தி.மு.க எதிர்கட்சியாக ஆனபின்தான் தீர்வு வந்தது. முல்லைப் பெரியாறு வழக்கும் அப்படித்தான்.


Kasimani Baskaran
மார் 24, 2025 16:24

என்னது.. அத்திக்கடவு திட்டத்தை முடித்துவைத்தார்களா?


Sridharan Venkatraman
மார் 24, 2025 16:22

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் : 2021 ஏப்ரல் வரை பெட்டி பெட்டியாக வாங்கிய புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டனவா ? அதற்கு உதவ, பதவி ஏற்றதும் அமைக்கப்பட்ட குழு இருக்கா ? நிதி நிலையை ஆராய அமைத்த ஐவர் குழு எத்தனை அறிக்கை கொடுத்தது? எத்தனை முறை கூடியது ?


Jayaraman Ramaswamy
மார் 24, 2025 16:04

மதுராந்தகம் ஏரியை அழித்த பெருமை இவர்களுக்கே உண்டு. என்றும் நீர் வற்றாமல் இருக்கும் ஏரி வறண்டு கிடக்கிறது 3 வருடங்களாக. ஏரியை சுற்றி ரோடு போட்டிருக்கிறார்கள். இன்னும் பத்து வருடங்களில் அந்த இடத்தில அடுக்கு மாடி குடியிருப்புக்குகளி எதிர்பார்க்கலாம்.


ponnusamy anand
மார் 24, 2025 15:59

where is the EPS questions???


புதிய வீடியோ