உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்ல விமர்சனங்களை ஏற்கிறோம்; மதுரை மாநாட்டிற்கு பின் விஜய் ரியாக் ஷன்

நல்ல விமர்சனங்களை ஏற்கிறோம்; மதுரை மாநாட்டிற்கு பின் விஜய் ரியாக் ஷன்

சென்னை: மதுரை மாநாடு தொடர்பாக வைக்கப்படும் நல்ல விமர்சனங்களை ஏற்பதாக, த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, விஜய் அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க.,வின் முதல் மாநில மாநாடான, 'வெற்றி கொள்கை திருவிழா' என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நடந்த இரண்டாவது மாநில மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றி பேரணியில் தமிழகம்' என்னை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த அளவு பேரன்பு காட்டும் தொண்டர்களை என் உறவுகளாக பெற, என்ன தவம் செய்தேனோ. கடவுளுக்கும், மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்தில் இருந்து கோடான கோடி நன்றி. மதுரையில் கடல் வந்து புகுந்தது போல் இருந்தது, நம் மாநாட்டு காட்சி. நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும், நமதாக்கி உரமேற்றுவோம்; அல்லவை அனைத்தையும் புறந்தள்ளி புன்னகைப்போம். கடந்த, 1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் நிகழ்த்தி காட்டப் போவது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2025 16:22

இதையும் யாரவது எழுதி கொடுத்திருந்தா தமிழ் நாட்டை காப்பாற்ற அல்லாவோ , யேசுவோ உயிரோடு வந்தாலும் முடியாது


சமீபத்திய செய்தி