உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க., கிடையாது: உதயநிதி பேச்சு

மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க., கிடையாது: உதயநிதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மத்திய அரசு மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க.,வோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.சென்னையில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் உதயநிதி பேசியதாவது: சென்னை மெட்ரோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தான் கொண்டு வந்தார். புதிய கல்விக் கொள்கை, ஹிந்தித் திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என ஸ்டாலின் சொல்லி உள்ளார். அனைத்து வகைகளிலும் ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க நேரடியாக முயற்சி செய்கிறது. புதிய கல்விக் கொள்கையையும், ஹிந்தித் திணிப்பையும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான். ஹிந்தியை குறுக்கு வழியில் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தற்போது நடப்பது தி.மு.க., ஆட்சி. நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க.,வோ, இ.பி.எஸ்., ஓ கிடையாது.ஹிந்தித் திணிப்பால் ஹரியானா, பீஹார் மற்றும் உ.பி, மாநிலங்களின் தாய்மொழி அழிந்துவிட்டது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் ரூ.6 ஆயிரம் கோடி தருவதாக சொல்கிறார்கள். ஹிந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றால், மாநிலத்தில் மீண்டும் மொழிப் போர் ஏற்படும்.தமிழகத்திற்குள் ஹிந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழி அழிந்துவிடும் தொகுதி மறுவரையறை மூலம் வட மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் தமிழகத்திற்கும் உயர்த்த வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

சகுரா
மார் 03, 2025 20:45

ஏய் நா யாரு தெரியம்ல?


Madras Madra
மார் 03, 2025 14:16

அம்மா என்கிற சிங்கம் இல்லை அதான் எல்லாத்துக்கும் குளிர் விட்டு போச்சு சில்லறை பசங்க எல்லாம் துள்ளுதுங்க


sureshpramanathan
மார் 03, 2025 12:07

Their schools imposing Hindi and Donot allow students to even talk in Tamil fine them These idiots blaming Hindi by Center which is fake news fabricated by DMk cheating people DMK are all thieves Loot everything from public and public money in all falsified schemes Most dangerous group Time to throw them out of government to save Tamilnadu if TN people vote these DMK idiots God will punish them by putting a atomic bomb self destruction


எவர்கிங்
மார் 03, 2025 11:37

செந்தில் பாலாஜி ...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 03, 2025 10:59

எந்த மிரட்டலுக்கும் யாரும் இங்கு பயப்படுவது இல்லை போலீஸ் கண்டு குற்றவாளி பயப்படுவது இல்லை சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் போலீஸ் பயப்படுவது இல்லை. மந்திரியை பார்த்து அதிகாரிகள் பயப்படுவது இல்லை அதிகாரிகள் பார்த்து அலுவலகரர்கள் பயப்படுவது இல்லை ஆசிரியர் கண்டு மாணவன் பயப்படுவது இல்லை. பொதுஜனம் காவல் துறை கண்டு பயப்படுவது இல்லை. மகன் மகள் அப்பா அம்மாவுக்கு பயப்படுவது இல்லை. திருடன் போதை வியாபாரி கொலை கொள்ளை ரவுடிகள் காவல் துறை கண்டு பயப்படுவது இல்லை. கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராம் கொண்டாட்டம். கைதி சிறை அதிகாரிக்கு பயப்படுவது இல்லை. மந்திரிகள் முதலமைச்சருக்கு பயப்படுவது இல்லை. எம் எல் ஏ எம் பி எதற்கும் பயப்படுவது இல்லை. வட்டங்கள் மாவட்டங்கள் யாருக்கும் பயப்படுவது இல்லை. பாலியல் குற்றவாளி எங்கும் எதற்கும் பயப்படுவது இல்லை. இதிலிருந்து நீங்கள் என்ன விதி விலக்கா பயப்படுவதற்கு.


ஆதிநாராயணன்
மார் 03, 2025 10:57

சுத்தமான செக்கில் ஆட்டின உருட்டு அது தான் உங்கள் பேச்சிலேயே அந்த பயம் தெரிகிறதே இதை விட பயத்தினால் யாரும் உளற முடியாது


Rajasekar Jayaraman
மார் 03, 2025 09:58

மிரட்டல் என்றால் என்ன என்று மிக விரைவில் மத்திய அரசு உனக்குப் புரிய வைக்கும்.


Shekar
மார் 03, 2025 09:55

நாங்க பயப்பட மாட்டோம் ...ஐயோ அம்மா கொல்றாங்களே


Rajasekar Jayaraman
மார் 03, 2025 09:53

அதிமுகவை விட மகா கேவலம் இவருடைய தாத்தாவை நாங்கள் இந்தி இந்திய எதிர்க்கவில்லை வெறும் பேப்பரைத்தான் கொளுத்தினோம் என்று கோர்ட்டில் சாட்சி சொன்னதெல்லாம் எரிந்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் பொய் சொல்வதும் ஒரு அளவு வேண்டும்.


Nagarajan D
மார் 03, 2025 09:45

நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சொன்னது உங்க தாத்தா அதாவது உங்க கம்பெனி முன்னாள் முதலாளி... பயப்படாம தான் இப்படி சொன்னாரோ?


சமீபத்திய செய்தி