உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சமரச தீர்விற்கு நாங்கள் தயாராக உள்ளோம்: ராம ரவிகுமார் தரப்பு வாதம்

 சமரச தீர்விற்கு நாங்கள் தயாராக உள்ளோம்: ராம ரவிகுமார் தரப்பு வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், 'கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பது அறநிலையத்துறையின் கடமை; அதை பாதுகாக்க அறநிலையத்துறை தவறிவிட்டது. 'இந்நீதிமன்றம் மூலம் நேரடியாக சுமுகமாக சமரச தீர்வு காண பிரதான மனுதாரரான ராம ரவிகுமார் தரப்பு தயாராக உள்ளது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தீபத்துாணில் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என டிச.,4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அவமதிப்பு வழக்கு டிச.,9ல் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'தமிழக தலைமைச் செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., காணொலியில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், நேற்று நான்காவது நாளாக விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர். ஸ்ரீராம்: தீபத்துாணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற அரசு தரப்பின் நிலைப்பாடு ஏற்புடையது அல்ல. ஒரு வழக்கு அடிப்படையில், 'எதிர்காலத்தில் தேவையெனில், வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்கலாம்' என, 1996ல் உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதிகள்: அந்த உத்தரவில் தீபத்துாண் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுதாரர் தற்போது கோவில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தீபத்துாணில் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை. ஸ்ரீராம்: கடந்த, 1920ல் சிவில் வழக்கு உத்தரவின்படி, மலையில் தீபத்துாண் அமைந்துள்ளது. அதில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரம் உள்ளது. அதற்குரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'மலையில் அமைந்துள்ளது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது நில அளவை எல்லையை குறிக்கும் சர்வே கல். அது கிரானைட்டால் ஆனது. சமணர்கள் காலத்து துாண். அத்துாணில் இரவில் சமணர்கள் தீபம் ஏற்றுவர்' என அரசு தரப்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தை சிவில் வழக்காக மாற்ற அரசு, தர்கா நிர்வாகம் தரப்பில் முயற்சிக்கப்படுகிறது. மனுதாரர் அனுப்பிய மனுவை கோவில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து, அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கின்றனர். தீபத்துாண் அல்ல என அறநிலையத்துறை மறுக்கும் நிலையில், அவர்களிடம் மேல்முறையீடு செய்தால் தீர்வு கிடைக்காது. கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை, அரசு தரப்பு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளதால், சமரச தீர்வு மூலம் பயன் ஏற்படாது. அரசு தரப்பு வேண்டுமென்றே நிலைமையை சிக்கலாக்குகிறது. வள்ளியப்பன்: தீபத்துாணில் தீபம் ஏற்றினால் மட்டுமே சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு தெரியும். அது தீபத்துாண் அல்ல என மறுப்பதற்கு சான்றுகள் இல்லை. இந்நீதிமன்றம் மூலம் நேரடியாக சுமுகமாக சமரச தீர்வு காண பிரதான மனுதாரரான ராம ரவிகுமார் தரப்பு தயாராக உள்ளது. கோவில், தர்காவிற்கு சொந்தமான பகுதிகள் குறித்து எல்லையை நிர்ணயிக்க மலையை அளவீடு செய்ய கமிஷனரை நியமிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. அரசு தரப்பு வாதத்திற்காக விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வள்ளி
டிச 18, 2025 18:29

சமரசம் என்பதற்கு பக்தர்களுக்கு உடன்பாடு இல்லை


V Venkatachalam, Chennai-87
டிச 18, 2025 15:15

நாம் இடத்தை வேறு ஒருவன் உரிமை கொண்டாட வருகிறான். அவனை விரட்டி அடிப்பதை விட்டு, அவனுடன் சமரசம் என்பது அபத்தம். மேலும் நல்ல மனம் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் ஆட்சேபனை எதுவுமே சொல்ல வில்லை. திருட்டு தீயமுக காரனுங்க வக்ஃப் போர்டில் உள்ளவர்களை தூண்டி இந்த விஷயத்தில் களம் இறங்கி இருக்கான்கள். இந்த விஷயத்தை ஆரம்பம் முதல் பார்த்து கொண்டிருக்கும் எல்லா வாசக நண்பர்களுக்கும் நன்கு தெரியும். ஆகவே ராம் ரவிக்குமார் தன்னுடைய சமரச முடிவை தூக்கி தூர வைக்கணும்.


Sridhar
டிச 18, 2025 15:06

இதில் எந்த சமரசத்துக்கும் இடமே இல்லை. நீதிபதியின் தீர்ப்பை நடைமுறை படுத்தவேண்டும். அதை செயல்படுத்தாத கையாலாகாத அரசை உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும். ஆளத்தெரியவில்லை, சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்றால் அதை கையாளதானே உங்களுக்கு போலீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது? அவ்வளவு பெரிய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதென்றால், இந்த ஆட்சி தொடர முற்றிலும் லாயக்கற்றது என்பது தெளிவாகிறது. மேலும் கோர்ட் உத்தரவை மதிக்காத ஒரு அரசு இந்த நாட்டில் இருக்கவே கூடாது. இந்த அரசு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிகளும் மந்திரிகளும் கைது செய்து சிறையில் அடைக்கப்படவேண்டும். ஊழல் குற்றங்களுக்காக அவர்கள் குடும்பங்கள் கைது தனிப்படலமாக தொடரவேண்டும்.


M S RAGHUNATHAN
டிச 18, 2025 10:29

மதுரை கோரிப் பாளையம் என்ற இடத்தில் உள்ள சமாதி யாருடையது ? அது சிக்கந்தர் பாஷா என்பவருடையது என்றால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமாதி யாருடையது. இரண்டு சமாதியையும் திறந்து பார்க்க வேண்டும்


Barakat Ali
டிச 18, 2025 12:20

தர்ஹா வழிபாடு / நினைவிடப் போற்றுதல் எதுவும் உண்மையான இஸ்லாத்தில் கிடையாது ..... ஏக இறைவனை, அவனது பெருமைகளை, உயிர்களின் மீதான அவனது ஆதிக்கத்தை எண்ணித் துதிக்கும் நமாஸ் என்னும் கடமை மட்டுமே உண்டு .......


Appan
டிச 18, 2025 09:24

முதலில் ராம ரவிக்குமார் தரப்பு அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கிறிஸ்டியன் என்று சொல்கிறார்கள் .இது உண்மையா இருந்தால் அவரை இந்து அறிநிலைய அமைச்சராக விளக்க வேண்டி போராடனும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் அவர் மாமாவை ஒரு கிறிஸ்டியனை திருப்பதி ஸ்தானத்துக்கு சேர்மனாக நியமித்து திருப்பதியின் புனிதத்தை மாசு படுத்தினார். அதோடு பல கிறிஸ்டியன்களை தேவ ஸ்தானத்தில் பதவி கொடுத்தார். சேகர் பாபுவும் இது போல் செய்யாமல் தடுக்க அவரை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றனும்


V RAMASWAMY
டிச 18, 2025 09:07

இதில் ஏதாவது சந்தேகமோ கோளாறோ இருந்தால் தானே வழக்கு என்று ஒரு விவாதம் தேவை, பின் சமரசம். அதற்கு தேவையே இல்லை. திருப்பரங்குன்றம் காலம் காலமாக திருமுருகன் தேவ ஸ்தலம், அங்கு பக்தார்கள் விளக்கு ஏற்றாமல் பின் கி பி 700ல் ஆரம்பித்த ஒரு மத வழிபாடு தளத்திலேயா ஏற்றுவார்கள்? இது அரசியலுக்காக செய்யப்படும் வீண் விதண்டாவாதம். சமத்துவம் சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளும் கட்சி செய்வதெல்லாம் சமத்துவமின்மையும் சமூக அநீதியும் தான். வாக்காளர்களே புரிந்துகொள்ளுங்கள். நமக்கு தேவை ஹிந்துக்களை மற்ற மதங்களையும் சமமாக மதிக்கும் கட்சி, அரசு.


bharathi
டிச 18, 2025 08:48

Ennadhu samarasama!!! how did Islam entered in our holy place.


vbs manian
டிச 18, 2025 08:45

சமரசம் இவர்களோடா .சஹாரா பாலையில் முல்லை பூக்குமா.


M S RAGHUNATHAN
டிச 18, 2025 08:35

இந்தியாவில் எங்கும் ஒரு இஸ்லாமியரை மலையில் புதைக்க மாட்டார்கள். தமிழக திமுக அரசு விதண்டாவாதம் செய்கிறது. தேவை இல்லாமல் தர்கா நிர்வாகத்தை தூண்டி விட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் முஸ்லிம் லீக் M P செய்த அடாவடி செயல். அப்பொழுதே அரசு அவரை கைது செய்து இருக்க வேண்டும். இசுலாமியர் வாக்கு வங்கிக்கு அடி பணிந்து வாளா விருந்தது தான் காரணம்.


M S RAGHUNATHAN
டிச 18, 2025 08:26

என்ன சமரசம். திருப்பரங்குன்றம் மலை சங்க காலத்தில் இருந்தே இருக்கிறது. மலை முழுவதும் குமரனுக்கே சொந்தம். இஸ்லாமியர்கள் தான் ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். ஆகவே தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மலை முழுவதும் கோவிலுக்கு உரியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை