உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்: நவாஸ் கனி எம்.பி., பேட்டி

மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்: நவாஸ் கனி எம்.பி., பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவனியாபுரம்: 'திருப்பரங்குன்றத்தில் இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சு நடத்த நாங்கள் தயார்' என நவாஸ் கனி எம்.பி., தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:மலை மீது உள்ள தர்காவிற்கு, ஆடு கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, மதுரை போலீஸ் கமிஷனரை சந்தித்து விட்டு, தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக தான் அங்கு சென்றோம்.சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு.அங்குள்ள தர்கா, வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது. மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது, வக்ப் வாரிய உறுப்பினர்; நான் தலைவர்.அந்த தர்காவிற்கு செல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன வசதி குறைபாடு உள்ளது என கேட்டு தெரிந்து, அதை அரசிடம் தெரிவிக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது.தர்காவிற்கு செல்பவர்கள் பிரியாணி சாப்பிடுகின்றனரா, சைவம் சாப்பிடுகின்றனரா என்று, இவர்கள் ஏன் கேட்கின்றனர்?அவர்களுடைய கோவிலுக்கு போகவில்லை; கோவில் வளாகத்திற்கு செல்லவில்லை. போலீசார் ஆடு, கோழிகளை கொண்டு செல்லத்தான் தடை, சமைத்த சாப்பாடு கொண்டு செல்வதற்கு தடையில்லை என்றனர். அவர்கள் சாப்பிட்ட புகைப் படத்தை பகிர்ந்தனர்; இது, காவல்துறை அனுமதித்த செயல்.நாங்கள் கைது செய்யப்பட வேண்டும் என, பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா கூறியுள்ளார். ஒரு எம்.எல்.ஏ., - எம்.பி., ஆய்வு செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்?சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா போன்றவர்களை கைது செய்ய வேண்டும். இப்பிரச்னையில் இரு மதங்களிடையே மத நல்லிணக்கம் ஏற்பட பேச்சு நடத்த நாங்கள் தயார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 132 )

Ramalingam Shanmugam
பிப் 20, 2025 15:45

எல்லா வழிபாட்டு தளங்களிலும் ஒரு தர்கா கட்டி ஆட்டைய போடுவது இவர்கள் தந்திரம் அய்யப்பன் கோவிலில் வாபர் என்று கதை விட்டு வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள்


Ramalingam Shanmugam
பிப் 20, 2025 15:42

Let muslim obey holy Quran


muthu
பிப் 19, 2025 00:38

Let muslim obey holy Quran and not to grab other religions holy places in the name of thaurga. Allah knows everything who is right and who is wrong


karthik
பிப் 18, 2025 08:07

இவன் பிரச்சனை பண்ணுவான் அப்பறம் சமாதானம் சொல்லுவான்.. யோ ஓடி போயிடு - திருப்பரங்குன்றம் முருகனுக்கு மட்டும் தான் சொந்தம்...இன்னொரு தடவ அந்த வந்தராதே வந்திராதே


ponssasi
பிப் 17, 2025 17:04

தர்க்கா எப்போது அங்கு முளைத்தது. இந்தியாவில் புகழ்பெற்ற எண்ணற்ற இந்து கோவில்களில் அருகில் இவர்கள் முஸ்லீம் வழிபாடு தளங்களை அமைத்துக்கொண்டார்கள். திருப்பாராம் குன்றம் முருகன் ஆலயம் பழமைவாய்த்ததா அல்லது தர்க்கா பழமைவாய்த்ததா? வந்தேறிகள் எல்லாம் சொந்தம் கொண்டாட முடியாது. இங்கு சிபான்மையினர் வாக்கு அரசியல் இருக்கும் வரை இவைகள் இருக்கும். மத நல்லிணக்க்கம் கேட்டதே இந்த நவாஸ் கணியால்தான். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நவாஸ் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காக சிறை கம்பிகளை எண்ணியிருப்பார்.


Veeraputhiran B (Kumariveeran)
பிப் 15, 2025 18:22

இணக்கம் என்பது வேண்டுமாரல் இருவருக்கும் இடையில் பேச்சு வார்தை மூலம் நிகழலாம் ...... இரு சமூக, ஜாதி, மத, அடிப்படையில் உருவாக்க முடியாது அது பல காலம் புரிதல் மூலம் ஏற்படும் நிகழ்வாகத்தான் இருக்க முடியும், இருவருக்கும் இடையில் பேச்சு வார்தை மூலம் ஒரு காலும் முடியாது... இது ஒன்றும் அரசியல் கூட்டணி அல்ல பணத்துக்ககாக அடிமையாக்குவதற்கு.


Enrum anbudan
பிப் 15, 2025 12:02

நீன்களெல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதி உன்னயெல்லாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள் பார் அவர்களை எதனால அடித்தாலும் தகும் செய்யிற தப்பை எல்லாம் நீ செய்துவிட்டு நல்லிணக்கம் பற்றி பேசுகின்றாய்,


Enrum anbudan
பிப் 15, 2025 12:01

நீயெல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதி உன்னயெல்லாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள் பார் அவர்களை எதனால அடித்தாலும் தகும் செய்யிற தப்பை எல்லாம் நீ செய்துவிட்டு நல்லிணக்கம் பற்றி பேசுகின்றாய்,


veeramani
பிப் 15, 2025 10:00

நீ என்ன சுதந்திர போராட்ட தியாகியா ???????????????????????????????????????


karthik
பிப் 14, 2025 12:02

அத்துமீறி கட்டிடம் கட்டிவிட்டு பின்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது இது தான் இவர்களின் 1000 ஆண்டுகால பழக்கம். இந்துக்கள் இனியும் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் நாட்டை இலக்கவேண்டியது தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை