உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் நாம் தோற்கவில்லை: கட்சியினரை கலகலப்பூட்டிய கமல்

தேர்தலில் நாம் தோற்கவில்லை: கட்சியினரை கலகலப்பூட்டிய கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:' நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்' என, ம.நீ.ம., தலைவர் கமல் கூறியுள்ளார்.சென்னையில் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார். மாநில நிர்வாகிகள் மவுரியா, தங்வேலு, அருணாச்சலம், ஊடக பிரிவு செயலர் முரளி அப்பாஸ், சென்னை மண்டல செயலர் மயில்வாகனன், மாவட்ட செயலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், 'தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்; குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்' என, கமலிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: நான் வீரத்திற்கு நெஞ்சை காட்டுவேன்; துரோகத்திற்கு முதுகை கூட காட்ட மாட்டேன். நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம். எனக்கு வயதாகி விட்டதால், கட்சி துவக்கியதாக சிலர் கூறினர். எனக்கடுத்து கட்சியினர் தான் பிள்ளைகளாக இருக்கின்றனர். தமிழக நலனுக்காகத்தான் கட்சியை துவக்கினேன். பூத் கமிட்டிகளை சரியாக அமைக்க வேண்டும். இதற்கு முன் இருந்தவர்கள் ஏமாற்றி விட்டனர். ஆசியாவில் முதல் நடுநிலை கட்சி ம.நீ.ம., தான். இதை நான் பிரதமர் மோடியிடம் சொன்னேன். ஒரே நாடு தான். இதை இடது, வலது என பிரித்து சொல்லக்கூடாது. எனக்கு பின்னாலும் கட்சி இருக்க வேண்டும். அதனால் தான் தலைவர்களை நான் உருவாக்குகிறேன்.'வாழும் காமராஜர், வாழும் காந்தி' என்ற பெயர் எனக்கு வேண்டாம்; கமல் என்ற பெயர் எனக்கு போதும். ஜாதி என்பது எனக்கு இடையூறாக இருக்கிறது. ஜாதி இருக்கிறதா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கு, 5,000, 10,000 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு விடாதீர்கள்; ஓட்டு போடாமல் வீட்டில் இருப்பது தேசத் துரோகம். திராவிடம் நாடு தழுவியது. இங்கு இரண்டு கட்சிக்குள் அடங்கி விடுவது இல்லை. தேசியமும் இருக்க வேண்டும்; தேசமும் இருக்க வேண்டும். தமிழர்களுக்கென தனித்தன்மையும் இருக்க வேண்டும். இவ்வாறு கமல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Easwar Kamal
செப் 19, 2025 18:43

இப்போது இந்த வீணாப்போன MP பதவிக்காக தன் கட்சியை அடகு வைத்து விட்டாச்சு. 2026 எலெக்சன் வரை கொஞ்சம் தாக்கு பிடித்து இருந்தால் மக்கள் மனதில் நின்று இருக்கலாம். அப்படி நின்று இருந்தால் உங்கள் கட்சி மதிமுக /தேமுதிக விட பெரிய கட்சியாக முன்னேறி இருக்கலாம். இப்போது இந்த ரெண்டு கட்சி விட சிறிய அளவிற்கு விட்டாச்சு. திமுக உங்களுக்கு இந்த ரெண்டு கட்சி விட குறைந்த அளவுதான் சீட் தரும். அந்த கட்சிகளுக்கே 2 அல்லது 3 சீட் தன கொடுப்பார்கள். அந்த கட்சிகள் எல்லாம் தனித்து போட்டி இட்டால் என்னாகும் என்று நன்கு தெரியும்.adhae நிலைமைதான் உங்களுக்கும்.


jss
செப் 19, 2025 12:07

சாதாரணமாகப் பேசினாலே ஒன்றும் பரியாது. இப்போது அரசியல் கலந்த பளச்சு அவ்வளவுதான் அவனவன் தலை முடி காலி. திருப்பதிக்கோ பழனிக்கோ செல்லவே வேண்டாம். இவர் பேச்சை கேட்டல் போதும் . சிலர் பைத்தியம் பிடித்து பாயை பிரண்டுவதற்க்கு நல்ல சான்ஸ்


theruvasagan
செப் 19, 2025 10:46

நாம் தோற்கவில்லை என்பது தப்பு. நான் தோற்கவில்லை என்பதுதான் சரி. யார் யார் காலிலோ விழுந்து கட்சியை அடமானம் வைத்து ஒரு பதவி வாங்கியாகி விட்டது. ஒருத்தன் பச்சோந்தி சுயகாரியப்புலி என்று தெரிந்தும் அவன் பின்னாடி நின்ற சினிமா மோகத்தில் ஊறி அழுகிப்போன அறிவிலிகள்தான் தோற்றவர்கள்.


Mecca Shivan
செப் 19, 2025 10:16

இவனோட சின்னத்தை இவன் கையில் பிடித்ததே இதற்குத்தான்


கண்ணன்
செப் 19, 2025 09:18

படிப்பில்லை ஆனாலும்.......


Sivaram
செப் 19, 2025 08:44

நான் வீரத்திற்க்கு நெஞ்சை காட்டுவேன் காண்பித்து ஒரு ராஜ்ஜிய சபா ஸீட் வாங்குவேன் நான் நல்லா ..............


Kulandai kannan
செப் 19, 2025 08:15

பிதற்றல்வாதி


பேசும் தமிழன்
செப் 19, 2025 08:07

உனக்கென்னப்பா.. நீ என்ன வேண்டுமானலும் பேசுவ.... நீ பேசுவது உனக்குக்கும் புரியாது...... கேட்பவர்களுக்கும் புரியாது..... அந்தளவுக்கு தெளிவாக பேசக் கூடியவர் நீங்கள்.


Padmasridharan
செப் 19, 2025 07:52

தனியாக நின்று ஜெயிக்கும் தைரியமான கட்சியென்று தங்களுக்கு முன்பு வோட்டளித்த மக்கள் தற்பொழுது வேறு கட்சிக்கு கண்டிப்பாக வோட்டளிப்பார்கள், வீட்டில் தங்கிவிடமாட்டார்கள் சாமி. NOTA வுக்கு பொத்தானை அழுத்தினால் என்னவாகுமென்று பலரும் அறியாமலேயே அழுத்தி வோட்டு அளிக்கும் நேரத்தை வீணடிக்கின்றனர். இவர்களும் புதிய கட்சிக்கு வோட்டளிப்பர். கவலை கொள்ள வேண்டாம். பணத்தை பெற்று வோட்டளிப்பதும் இலவச பயணத்திற்காக வோட்டு போடுவதும் ஒன்றே. இந்தியரே


Tamilnews
செப் 19, 2025 07:48

டார்ச் நல்லா வேலை பண்ணுது போல ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை