உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மை வெளியில் வரும்: விரைவில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறேன்: வீடியோ வெளியிட்ட விஜய்

உண்மை வெளியில் வரும்: விரைவில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறேன்: வீடியோ வெளியிட்ட விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அனுமதிக்கப்பட்ட இடத்தில் நின்று பேசியதை தவிர நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்க வருகிறேன்,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர். இச்சம்பவத்திற்கு, எதிர்பார்க்காத அளவிற்கு அதிக கூட்டம் கூடியது, போலீசாரின் மெத்தனம், விஜயின் காலதாமதமான வருகை, பிரசார வியூகத்தில் செய்த குழப்பம், திட்டமிட்ட சதி என, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qhzlw2aw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:

கடமை

அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இதுபோன்ற வேதனையான சூழ்நிலையை நான் சந்தித்தது கிடையாது. மனது முழுக்க வலி.வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் தான் . அந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டு உள்ளேன். அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்ற எண்ணம் தான் என் மனதில் ஆழமாக இருக்கும். அதனால், அரசியல் காரணங்களை அனைத்தையும் தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவைத்துவிட்டு. மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அதற்கான இடங்களை அனுமதி கேட்பது, போலீசாரிடம் கேட்போம்.ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுட்டு இருக்கும் போது எப்படி அந்த ஊரை விட்டுவிட்டு கிளம்பி வர முடியும். நான் திரும்ப அங்கு சென்று இருந்தால், அதை ஒரு காரணம் காட்டி, வேறு விஷயும், பதற்றமான சூழ்நிலை, வேறு சில விஷயங்கள், அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தவிர்த்தேன்.

நன்றி

இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கிற அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தெரியும். என்ன சொன்னாலும், இது ஈடே ஆகாது என எனக்கு தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் குணமடைந்து வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களின் வலிகளை எங்களின் நிலைமையை புரிந்து கொண்டு பேசிய அரசியல், கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உண்மை தெரியும்

கிட்டதட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் நடக்கிறது. எப்படி நடக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு உள்ளனர். கரூரைச் சேர்ந்த மக்களை உண்மையை எல்லாம் வெளியில் சொல்லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து உண்மையை சொல்வது போல் தெரிந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்கள் நின்று பேசி வந்தது தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் கட்சி நிர்வாகிகள்,தோழர்கள் மீது வழக்குப்பதிவு, சமூக வலைதளத்தை சேர்ந்த நண்பர்கள் மீது வழக்குப்போட்டு கைது செய்கின்றனர்.சிஎம்சார், உங்களுக்கு ஏதாவது பழிவாங்கும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நண்பர்களே, தோழர்களே, நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் தைரியத்துடன் தொடரும். நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் விஜய் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Subburamu K
அக் 01, 2025 07:40

Parents are the worst enemies to the children, why they are taking tender kids to the crowded events Liquor Narcotics crazy for Cinema celebrities are spoiling the youths and the state


Dhandapani.R
அக் 01, 2025 05:48

மக்கள் கூட்டத்தையும் அவுங்க சத்தம் இதையெல்லாம் பார்க்கும்போது ....


அன்பே சிவம்
அக் 01, 2025 04:24

1). ஆதவ் அருச்சுனன் மற்றும் புஸ்ஸி ஆனந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது பண்ணி நிரந்தரமாக சிறையில் களி சாப்பாடு போட வேண்டும். 2). பாகுபலியில் வரும் காலகேயர் கூட்டம் போல கரூரில் TVK செயல்பட்டது. 3). விஜயை கைது பண்ண வேண்டும். முதல்வர் ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரியவில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 01, 2025 03:06

கரூரில் மட்டும் நடக்கிறது. எப்படி நடக்கிறது. இவரது கேள்வி மற்ற ஊர்களில் மக்கள் ஏன் சாகவில்லைன்னு கவலைப்படுவது போலல்லவா இருக்கிறது??


எஸ் எஸ்
செப் 30, 2025 20:54

போதும் அரசியல். உங்களுக்கு சரிப்பட்டு வராது. எந்த மாற்றத்தையும் உங்களால் கொண்டுவர முடியாது. மீண்டும் சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது, 100 பேரை சட்டை கசங்காமல் அடித்து துவைப்பது என்று நடிக்க செல்லுங்கள்


முருகன்
செப் 30, 2025 20:26

மக்களை பல மணிநேரம் வெயிலில் காக்க வைத்து விட்டு பேச்சை பார் நல்லவர் மாதிரி இவரால் ஒரு ஜந்து நிமிடம் வெயிலில் நிற்க முடியுமா?


Mariadoss E
செப் 30, 2025 20:06

நம்ம பக்கம் உள்ள தப்ப ஒத்துக்க, மன்னிப்பு கேட்க பெருந்தன்மை முக்கியம். என் மீட்டிங் வந்துதான் உயிர் போனது வருத்தம் என்றாவது சொல்லலாமே. உங்களை வழி நடத்துபவர்கள் சரியில்லை அவ்வளவு தான்.....


Rajarajan
செப் 30, 2025 19:54

அதுசரி. உங்கள பத்தி, ஓவர் பில்ட்அப் தருவாரே உங்கப்பா. அவரு எங்கப்பா ??


KRISHNAN R
செப் 30, 2025 19:31

எந்த கட்சியும்,, சேவைக்கு வரவில்லை... ஆட்சி அமைக்க,,, வேறு பல வேலைகள் செய்ய தான்....


viki raman
செப் 30, 2025 19:22

விஜய் சார் எதுக்கு ரயில் வண்டி. அதே ரோடுபியுள்ள அடச்சீக்குது.சிம்பிள் van கு மாறுங்க சார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை