உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவரைப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் ரயில்வே டி.ஜி.பி., தகவல்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் ரயில்வே டி.ஜி.பி., தகவல்

சென்னை : ''கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான விசாரணையில், குற்றவாளி களை நெருங்கி விட்டோம்,'' என, ரயில்வே டி.ஜி.பி., வன்னியபெருமாள் கூறினார்.

அவர் கூறியதாவது:

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு முறைகளும் மாறியுள்ளன. எனவே, அதற்கேற்ற வகையில், சைபர் தொழில்நுட்பம் உதவியுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரயில் நிலையங்கள் மற்றும் பயணியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தமிழக சிறப்பு காவல் படை வீரர்களை கேட்டுப் பெற்றுள்ளோம்.திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து குறித்த விசாரணை, சரியான பாதையில் செல்கிறது. மாவட்ட போலீசாருடன் இணைந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றம் செய்தவர்கள் யார் என்பது குறித்தான தகவல்கள், விரைவில் வெளியிடப்படும். கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, வேறு ஒரு கண்ணோட்டத்திலும், விசாரணை நடந்து வருகிறது; குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை