உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா தவறாக பயன்படாது என நம்புகிறோம்: நர லோகேஷ்

முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா தவறாக பயன்படாது என நம்புகிறோம்: நர லோகேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''30 நாட்கள் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட வரைவு, தவறாக பயன்படுத்தப்படாது என நம்புகிறோம்; அதை வரவேற்கிறோம்'' என ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் கூறியுள்ளார்.கோவையில் நடந்த, 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' நிகழ்வில், ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ் கூறியதாவது:துணை ஜனாதிபதி தேர்தலில், 'தெலுங்கு மகன்' என்ற பெருமித அரசியலுக்கு தெலுங்குதேசம் கட்சி பலியாகி விடாது. இந்தியாதான் முதலில். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளோம். ஒரு நல்ல தலைவரால், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். தேசத்தை வழிநடத்தும் திறமைமிக்க தலைவராக, பிரதமர் மோடியை பார்க்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த துணை ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கிறோம்.சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் பதவி மீது, ஒரு கண் என்பதில்லை. அவரின் இரு கண்களும் ஆந்திர வளர்ச்சியில் உள்ளது. 2029 மட்டுமல்ல; அதற்குப் பிறகும் தேசிய ஜனநாயக கூட்டணியை தெலுங்குதேசம் ஆதரிக்கும். பிரதமர் மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களுக்கு கருத்து வேறுபாடு இருப்பின், தனிப்பட்ட முறையில் நிச்சயம் தெரிவிப்போம்.இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது. நாட்டை வழிநடத்தும் அரசியல்வாதிகள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். பொருளாதாரம் அதிகரிக்கும்போது, ஊழல் அதிகரிக்கலாம். 30 நாட்கள் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட வரைவு, தவறாக பயன்படுத்தப்படாது என நம்புகிறோம்; அதை வரவேற்கிறோம். ஒரு கல்வி அமைச்சராக, குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
செப் 09, 2025 01:56

ஸ்டாலின், மம்தா, சித்தராமையா, ரேவந் ரெட்டி மற்றும் பிரானாய் விஜயன் மீது இந்த மசோதாவை பயன்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.


Tamilan
செப் 08, 2025 23:04

இவர் கழுத்துக்கு இவர்கச்சி கழுத்துக்கு கத்தி வரும் என்ற பயம் வந்துவிட்டது


D Natarajan
செப் 08, 2025 21:48

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மாதிரி சட்டம் தேவை.


venugopal s
செப் 08, 2025 21:14

பாஜக கூட்டணியில் இருக்கும் வரை மட்டுமே இந்த சட்டம் தவறாகப் பயன் படுத்தப் படாது என்று தான் நாங்களும் சொல்கிறோம்!


Narayanan Muthu
செப் 08, 2025 20:58

வேண்டுமானால் NDA கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி பரீர்ச்சித்து பாருங்களேன். அப்போது உங்களின் நம்பிக்கை என்னவாகிறது என்று பார்க்கலாம்


ஈசன்
செப் 08, 2025 20:41

தவறாக பயன்படுத்த கூடாது என்றால் என்ன அர்த்தம். வழக்கு என்று வந்து விட்டால் நீதிமன்ற தீர்ப்பு, சிறை என்று வழங்கப்பட்டால், அப்போது அரசு தரப்பில் சட்டபடி நடவடிக்கை என்பது எப்படி தவறாகும். ஒரு வேளை லோகேஷ் நீதி துறைக்கு அறிவுரை வழங்குகிறாரா!


V Venkatachalam
செப் 08, 2025 20:28

இவரு திராவிடியா சித்தாந்த்தை நொறுக்கி விட்டார். திராவிடியா சித்தாந்தம் என்பது உன் பாக்கெட்டில் மட்டுமல்ல யார் பாக்கெட்டிலும் எதுவும் இருக்க கூடாது. எல்லாமே என் பாக்கெட்டில் இருக்கணும்.