உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களுடன் நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: உதயநிதி பேச்சு

மக்களுடன் நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: உதயநிதி பேச்சு

சென்னை: ''இந்த மழையில் மக்களோடு நாம் நின்றோம் என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும்,'' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றுடன் முடிவடையவில்லை.இன்னும் இரண்டு நாள் கழித்து இன்னொரு மழை வரப்போகிறது என வானிலை மையம் கூறியுள்ளதுவலுவடைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. சென்ற முறையை விட அதிகமாக மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், நாம் எப்படி சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். மக்களை எப்படி பாதுகாப்பது என்பதற்காக தான் இந்தக்கூட்டம்.நான் செல்லும் போது சில இடங்களில் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது.ஒரு மணி நேரம் மழை விட்டு வெயில் அடித்தால் ஆங்காங்கே வடிந்து விடுகிறது. சில இடங்களில் நிற்கும் போது மக்கள் வந்து கூப்பிடுகின்றனர். வந்து பாருங்கள் என்கின்றனர்.அப்போது கோபத்தோடு கூப்பிடவில்லை.சிரித்த முகத்தோடு தான் கூப்பிடுகினறனர்.வந்து பாருங்கள். நீங்கள் வந்து பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர்.நமது அரசு முதல்வர் கவனத்துக்கு இந்த பிரச்னை போனால், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். நிச்சயம் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இருக்கக்கூடிய வட்ட செயலாளர், கவுன்சிலர் இந்த பணிகளில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் நம்மை அழைத்துச் செல்கின்றனர்.இந்த மழையில் மக்களோடு நாம் நின்றோம் என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raj S
அக் 22, 2025 21:25

இவ்வளவு அறிவா??


N S
அக் 22, 2025 19:15

"சிரித்த முகத்தோடு தான் கூப்பிடுகினறனர். நீங்கள் வந்து பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர்." மக்களுடன் நின்ற மைந்தன். சென்னைவாசிகள் மற்றும் தமிழக மக்களின் தலையெழுத்து.


V RAMASWAMY
அக் 22, 2025 18:23

மாடல் அரசில் எல்லாமே முதலிடம் என்பதை என்பதை நிரூபிக்கவேண்டும்.


Modisha
அக் 22, 2025 16:55

இன்ஸ்டாக்ராம் ல ஏதோ …..


Vasan
அக் 22, 2025 16:55

மழை நீரை ஒவ்வொரு குடிமகனும் தத்தம் வீட்டில் சேகரிக்க வேண்டும். அது மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும்.


sasikumaren
அக் 22, 2025 16:49

துபாய் மக்களுக்கு அறிவுரை சொல்கிறாரா ஏன் என்றால் தமிழர்களின் பணம் இப்போது இப்போது அமெரிக்கா துபாய் ஜெர்மனி போன்ற நகரங்களில் குவிந்து கிடக்கிறது சுமார் லட்சம் கோடி ரூபாயாக


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 16:18

மழையில் நனைவது போல காணொளி காட்சி எடுத்து அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்களுக்கு இடையில் ஒளிபரப்பினால் போதுமே


சமீபத்திய செய்தி