உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் தனியாகத்தான் நிற்பேன்: சீமான் மீண்டும் திட்டவட்டம்!

நான் தனியாகத்தான் நிற்பேன்: சீமான் மீண்டும் திட்டவட்டம்!

கோவை: தி.மு.க.,வுக்கு எதிராக, ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என இ.பி.எஸ்.., கூறியுள்ளார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இதை நான் வரவேற்கிறேன். அவர் வரவேற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்' என சீமான் பதில் அளித்தார். கோவை விமான நிலையத்தில், நிருபர்களுக்கு சீமான் அளித்த பேட்டி: புதிய கல்விக்கொள்கை இல்லம் தேடி கல்வியில் தான் வருகிறது. நாம் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோமா, ஏற்கிறோமா என்று தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டு உள்ளோம். கல்வி ஆய்வாளர்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கை நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்கிற மரண சாசனம் என்று சொல்கிறார்கள்.

பெரிய தடை

கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்க கூடாது. எந்ந நாட்டிலும் இல்லாத வகையில் இந்த நாட்டில் மட்டும் தான் விரும்பிய கல்வியை படிப்பதில் அவ்வளவு தடையாக இருக்கிறது. மருத்துவத்தில் பி.ஜி., படிக்க மறுபடியும் நீட் எழுத வேண்டி இருக்கிறது. மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். நாட்டை நிர்வகிக்கும் தலைவர்கள் என்ன தேர்வு எழுதுகிறார்கள்.

பணம் இருந்தால்..!

எந்த தகுதியும் இல்லாதவர் இந்த நாட்டை ஆளும் தகுதி பெற முடியும். எல்லாவற்றிக்கும் தேர்வு வைக்கிறார்கள். கல்வியில் சிறந்த நாடாக இருக்கும் தென்கொரியா 8 வயதில் தான் பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்க்கிறது. நீங்க 8 வயதில் பொதுச்தேர்வு எழுத சொல்கிறார்கள். கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டு சமகல்வி என்று பேசுவதை நாங்கள் எப்படி எடுத்து கொள்வது. பணம் இருந்தால் நல்ல கல்வியை கற்கலாம்.

100 நாள் வேலை

முதல் தர ஆசிரியர்களை எங்க பணி நியமனம் செய்கிறீர்கள்? சம கல்வி என்பது இருக்கிறதா? எனது அம்மா, தங்கை, அக்கா 100 நாள் வேலைக்கு போகிறார்கள். அவள் உப்புக்கு, அரிசிக்கு, பாலுக்கு, எண்ணெய்க்கு என்ன சேவை வரி கட்டுகிறாளோ? அதே தான், இந்த நாட்டில் அம்பானி, அதானி மனைவி கட்டுகிறார்கள்.

வரி vs வாழ்க்கை தரம்

வரி என்பது இந்த நாட்டில் ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கை தரம் ஒன்றாக இருக்கிறதா? சம கல்வி, சம உரிமை என்பது வெற்று வார்த்தை. சிற்றூரில் 3ம் தர ஆசிரியர்கள் தான் பணி அமர்த்துகின்றனர். ரஷ்யா, அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவனுக்கு இந்திய கனவு இருக்கிறதா? இந்த நாட்டு மாணவனிடம் அயல்நாட்டு கனவு தான் இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

எஸ்.பி., வேலுமணியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது எல்லோரும் பங்கேற்பார்கள். எங்கள் குடும்ப நிகழ்வு. இதில் அரசியல் பேசாதீர்கள்' என சீமான் பதில் அளித்தார்.தி.மு.க.,வுக்கு எதிராக, ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என இ.பி.எஸ்.., கூறியுள்ளார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இதை நான் வரவேற்கிறேன். அவர் வரவேற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய பங்கு இதில் முதன்மையானதாக இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள். நான் மட்டும் தனியாக நிற்பேன். நான் மட்டும் தான் உருப்படியாக நிற்கிறேன்' என சீமான் பதில் அளித்தார்.

இது நிலைப்பாடு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து சீமான் கூறியதாவது: 30 கோடி இருக்கும் போது 543 எம்.பிக்கள் இருந்தார்கள். இப்போது 150 கோடியை தொட்ட பிறகு மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. ஆறு சட்டமன்றத்தில் ஒரு நாடாளுமன்றம் என்று இருப்பதை மாற்றி, 3 சட்டமன்றங்களுக்கு ஒரு நாடாளுமன்றம் என்று மாற்ற வேண்டும். அப்போது உரிய பிரதிநிதித்துவம் இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

naranam
மார் 10, 2025 23:57

தனியாக நில்லு என்று தான் கூறுகிறோம்..எப்போதும் கூடவே இத்தனை பெண்களை எதற்கு நிற்க வைக்கிறீர்கள் என்று கேட்பது கூடவா இவருக்குப் புரியவில்லை?


Vijay D Ratnam
மார் 10, 2025 23:43

சீமான் எந்த குழப்பமும் இல்லாத மிக தெளிவான ஒரு அரசியல்வாதி. அவருக்கு ஆளும் கட்சியாக வேண்டுமென்றோ எதிர்க்கட்சி ஆகவேண்டுமென்றோ, கணிசமான எம்.எல்.ஏக்களை, எம்.பிக்களை தன் கட்சி பெறவேண்டும் என்றோ அவர் ஆசைப்படவில்லை, ஆசைப்படவும் மாட்டார். அவரது குறிக்கோள் சிம்பிளா, க்ளியரா, கிரிஸ்டல் க்ளீனா இருக்கிறது. திமுக எதிர்ப்பு வாக்குகள் பல்க்காக அதிமுக பக்கம் சென்றுவிட கூடாது என்பதற்காக துருபிடித்து காயலாங்கடையில் கிடந்த திமுக கட்சிக்காரனோட வண்டியை வாட்டர் வாஷ் பண்ணி கொண்டு வந்து திமுகவால் நிறுத்தப்பட்ட வண்டிதான் நாம் தமிழர் கட்சி. சீமான் திமுகவால் வளர்க்கப்படும் ஒரு புரோக்கர், கமிஷன் ஏஜென்ட். சொம்மா அப்பப்ப சீமான் மீது திமுக அல்லக்கைகள் பாய்வதும், இவரு திமுக மீது பாய்வதும், சவடால் உடுறதும் கட்டுமர கம்பெனியின் ஸ்க்ரிப்ட். ஒரு பக்கம் ரெகுலர் புரோக்கர் சீமான் கட்சி திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவுக்கு போய்விடாமல் பிரிக்கும். அதுமட்டுமல்ல என்னதான் பாஜக திமுக கள்ள உறவு இருப்பதும் அமித்ஷா கனிமொழி இடையே கள்ளக்கூட்டணி இருப்பதையும் தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டாலும் மும்மொழி, முருகன், மோடி என்று பாஜக இன்னொரு பக்கம் திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவுக்கு முழுசாக போய்விடாமல் பிரிக்கும்,சோ, திமுக கூட்டணி வழக்கம் போல 2026 லும் அதிமுகவை விட ரெண்டு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கும். லோக்கல்ல இருக்குற புரோக்கருக்கு கமிஷன் போய்விடும், டெல்லி பாட்னருக்கு ஷேர்ஸ், செட்டில்மெண்ட்ஸ், டீலிங்ஸ்லாம் பார்க்க ஆடிட்டர்தான் இங்கேயே இருக்காருல்ல. சோ திமுக ஹாப்பி அண்ணாச்சி, சீமான் ஹாப்பி அண்ணாச்சி, டெல்லிவாலா ஹாப்பி அண்ணாச்சி.


Ramesh Sargam
மார் 10, 2025 20:24

நான் தனியாகத்தான் நிற்பேன்: சீமான். அப்படி என்றால் இதுவரை நீங்கள் நிற்பதற்கு யாராவது துணை இருந்தார்களா? அல்லது ஊன்றுகோல் உதவியுடன் நின்றீர்களா?


Guna Gkrv
மார் 10, 2025 20:08

இந்த மூன்று பெண்களும் என்ன வேலை அங்கே உங்களுக்கு இவ்வளவு பேசுகிறான் ஆனாலும் அவன் கூட நிற்க்கும் நீங்கள் யார் யார் உங்களுக்கு புத்தி கிடையதா? வெட்க கேடு முதலில் கட்சியை விட்டு போங்கள்


Ray
மார் 10, 2025 23:50

தூற்றுவது எளிது நம்மை நாம் நிரூபிப்பது எளிதல்ல.


தாமரை மலர்கிறது
மார் 10, 2025 19:14

ஸ்டாலின் எதிர்ப்பு ஓட்டுக்களை ஓரணியில் திரட்டுவதை ஆதரிக்கிறேன். ஆனால் நான் தனியாக நின்று, ஸ்டாலின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து ஸ்டாலினை மீண்டும் ஜெயிக்க வைப்பேன் என்பது தான் சைமனின் அறைகூவல். ஸ்டாலினிடம் பெட்டிவாங்கிக்கொண்டு, தேர்தலுக்கு முன்னரே, கட்சியை விற்கும் வியாபாரி தான் சைமன். இவரை நம்பி விஜயலக்ஷ்மி நாசம் போனது மாதிரி, இவரது மண்டு தம்பிகள் நாசமடைய போகிறார்கள்.


nagendhiran
மார் 10, 2025 18:43

அப்ப கடைசி வரை வைப்புகூட வாங்க மாட்டேனு சொல்லு சைமா?


மால
மார் 10, 2025 17:59

மாதரசிகள் புடை சூழ உனக்கு என்ன போண்டியாவது வேட்பாளர் தான விடு


INDIAN Kumar
மார் 10, 2025 17:29

ஊழல் கூட்டணிகளை ந்ம்பாதீர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்


INDIAN Kumar
மார் 10, 2025 17:28

பாஜக பாமக சீமான் விஜய் இணைத்தால் திமுக ஆதிமுவுக்கு மாற்றாக முடியும்.


INDIAN Kumar
மார் 10, 2025 17:27

திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல இரண்டும் ஊழல் கொடி யில் பூத்த மலர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை