உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: பா.ஜ.,வின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பலர் பல வேஷம் போடுகின்றனர். சில பேர் சினிமா புகழோடு வந்துள்ளனர். ஹீரோ என்ற வேஷத்துடன் வந்துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.திருச்சியில் நடந்த பேரணியில் திருமாவளவன் பேசியதாவது: அனைவரும் தேர்தல் கணக்குகளை பற்றியும், எத்தனை இடங்களை பற்றியும், யார் முதல்வர் என்பது பற்றியும் பேசி கொண்டு உள்ளனர். நமக்கு அந்த கவலையில்லை. சிலர், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை. பேரம் பேச தெரியவில்லை. மிரட்ட தெரியவில்லை. துணை முதல்வர் வேண்டும் என கேட்க மறுக்கிறார். முதல்வர் பற்றியே கவலைப்படவில்லை. துணை முதல்வர் பதவியா அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என வழிகாட்டி உள்ளார். அது தான் அதிகாரம் உள்ள பதவி . அது தான் அரசு.எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது திருமாவளவனுக்கு, விடுதலை சிறுத்தைகளுக்கு தெரியும். மற்றவர்களின் அறிவுரை தேவையில்லை. 10 ஆண்டுகள் தேர்தல் அரசியல் புறக்கணிப்பு செய்தோம். 25 ஆண்டு தில்லு முல்லு அரசியலில் தாக்கு பிடித்து நிற்கிறோம். சம களத்தில் எங்களுடன் வந்தவர்களை காணவில்லை.

நெருக்கடி

திருச்சியில் இந்த பேரணி நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றனர். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் மேலிடத்தில் இருந்தும் அனுமதி வரவில்லை என்றார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்களை போலீசார் அகற்றினர். மற்ற கட்சி கொடிகள் இருக்கின்றன. போலீசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் இது ஒரு ஒரு வாய்ப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மட்டும் அகற்றி உள்ளனர். இவ்வளவு நெருக்கடிகளை தாங்கி கொண்டு களத்தில் நிற்கிறோம்.கொடியேற்ற முடியவில்லை. பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை.பேரணி நடத்த முடியவில்லை. மாநாடு நடத்த முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இவ்வளவு நெருக்கடி உள்ளது. இவ்வளவு நெருக்கடியை தாண்டி நிற்கிறோம்.

எங்களின்அரசியல்

தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடும். எங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைக்கு வரப்போகுதா? என்ன செய்ய முடியும்? மத்திய அரசாலும் மாநில அரசாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எதற்காக யாருக்காக பயப்பட வேண்டும். எங்களுக்கு என்ன நெருக்கடி? எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்க பார்த்தாலும், நாங்களே மையமாக மாறுவோம். இது தான் எங்களின் அரசியல்.தி.மு.க., உடன் உள்ள உறவு கொள்கை உறவு. இடங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு செய்து கொள்வோம். தி.மு.க.,வுக்கும் எங்களுக்கும் உள்ள விமர்சனத்தை தாண்டி தேர்தல் உறவை வைத்து கொண்டோம் என்றால், அது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கை முடிவு. பா.ஜ.,வின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பலர் பல வேஷம் போடுகின்றனர். சில பேர் சினிமா புகழோடு வந்துள்ளனர். ஹீரோ என்ற வேஷத்துடன் வந்துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சினிமா பின்னால் சினிமா ஹீரோக்கு பின்னால் செல்வார்கள் என சொல்கின்றனர். வெறும் சினிமா விளம்பரம் அல்லது புகழை நம்பி நீங்கள் ஏமாற மாட்டீர்கள். அம்பேத்கரை நம்பிய எவனும், எந்த விளம்பர மோகத்துக்கும் அடி பணிய மாட்டான்.

தேசமே முதன்மை

சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் அனைவரும் தமிழகத்திற்குள் தான். அம்பேத்கர் இவர்களை தாண்டிய ஸ்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த பக்கம் தான் வெற்றி. ஆட்சி அதிகாரம். இதனை யதார்த்தத்காக சொல்கிறேன். தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தை பற்றி கவலைப்படுகிறது.எல்லாவற்றையும் விட முதன்மையானது தேசம். 2026 தேர்தல், பேரம், வெற்றி தோல்வியை விட கூட்டணி கணக்குகளை விட தேசம் முதன்மையானது. அந்த தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Natarajan Ramanathan
ஜூன் 15, 2025 23:41

முதல்வர் பதவி அதிகாரமே இல்லாத பதவி என்று நேரடியாக சொல்லவேண்டியதுதானே?


Natarajan Ramanathan
ஜூன் 15, 2025 23:37

உலக நாயகன் கமல் மற்றும் உதயநிதியை நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல் இப்படி ஊளை இடுகிறான்.


Chandru
ஜூன் 15, 2025 19:45

shame shame puppy shame . Daily you keep proving that you dont have any shame.


Natanasabapathy pillai
ஜூன் 15, 2025 16:41

உம்மிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ஹிந்து வாக பிறந்துவிட்டு முஸ்லிம்களுக்கு சாமரம் வீசி பிழைப்பு நடத்துகிறீர்கள் .


PRABBHU .V
ஜூன் 15, 2025 16:27

ஏன் திருமாவளவன் மற்றவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்? இவர் இவ்வளவு காலம் சிதம்பரம் மக்களுக்கு என்ன செய்தார் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


Bala
ஜூன் 15, 2025 16:15

உனக்கு எங்க பெட்டி அதிகமா கிடைக்குதோ அங்கேதான் நீங்க இருப்பீங்க. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை


Venukopal, S
ஜூன் 15, 2025 10:21

வடக்கன், ஆரியன், வடமொழி ஆதிக்கம், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, ஹிந்துத்துவா அப்டின்னு இன்னும் எவ்ளோ நூற்றாண்டுக்கு கதற வேண்டுமே...குருமா மைண்ட் வாய்ஸ்


rasaa
ஜூன் 15, 2025 10:06

ஆம். வி.சி.க. துணை தலைவர்களே, தொண்டர்களே, இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். திரைப்படத்தில் வருவது போல் பெட்டிக்குள் டம்மி பணம் வைத்து கொடுத்துவிடுவார்கள். ஜாக்கிரதை.


புரொடஸ்டர்
ஜூன் 15, 2025 08:13

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் என்ன செய்துகொண்டு இருந்தாய் திருமாவளவன்?


theruvasagan
ஜூன் 15, 2025 08:03

நான் அவனோட குடும்பத்தை கேவலமா பேசுவேன். அவனும் என் குடும்பத்தை கழுவி ஊத்துவான். நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் என்கிறதாலே இந்த அசிங்கத்தையெல்லாம் ஜாலியா எடுத்துக்குவோம். நாங்க மானம் ரோஷமல்லாம் பார்க்கிறதே கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை