உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாதம் முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டோம்

6 மாதம் முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டோம்

நாங்கள் 200 தொகுதிகளில் நிச்சய வெற்றி என்று சொல்லி வருவதால், எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க., பொதுச்செயலருமான, பழனிசாமி 210 தொகுதிகள் என்று சொல்ல துவங்கி உள்ளார். இதனால், நாங்கள் 220 தொகுதிகள் என சொல்ல வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் உட்பட நாங்கள் அனைவரும், எங்கள் வேலையான மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்; ஆனால் எதிர்க்கட்சி தலைவர், அவர் வேலையை மட்டுமே செய்கிறார். எத்தனை தொகுதிகள் வெற்றி என்பதை, தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்கட்சித் தலைவர், 'மக்கள் யாத்ரா' என்ற பெயரில், இப்போதுதான் தேர்தல் பணியை துவக்கி மக்களை சந்திக்க சென்றுள்ளார். தி.மு.க., ஆறு மாதங்களுக்கு முன்பே, தேர்தல் பணியை துவங்கி விட்டது.- உதயநிதி,துணை முதல்வர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 07:18

6 மாதம் முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டோம்...சரி மக்கள் ஒட்டு போடனுமே .. இனிமேல் காசுகொடுத்தாலும் ..அக்கப்போர் வெள்ளை குடை கட்சிக்கு மக்கள் ஓட்டு போடுவது சந்தேகமே ..


புதிய வீடியோ