உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்களும் அதிக தொகுதிகளை கேட்போம்: சொல்கிறார் திருமாவளவன்

நாங்களும் அதிக தொகுதிகளை கேட்போம்: சொல்கிறார் திருமாவளவன்

அரியலூர்: அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பது வாடிக்கை தான். தி.ம.க., கூட்டணியில் நாங்களும் அதிக தொகுதிகளை கோருவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.அரியலூரில் நிருபர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: இதுவரையில் தி.மு.க., கூட்டணிக்கு எந்த சவாலும் உருவாவதற்கான சூழல் கனியவில்லை. தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாகவும் வலுவாகவும் இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zztqcsza&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., கூட்டணி வடிவமே பெறவில்லை. குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டியது இல்லை. யதார்த்தமான உண்மை அதுதான். அமித்ஷா ஒரு முறைக்கு இரண்டு முறை வந்தார்.கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார். பா.ஜ., எதிர்பார்த்தது போல் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகின்றன. தே.மு.தி.க., பா.ம.க., ஆகிய கட்சி தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. அ.தி.மு.க., பாஜ., தவிர வேறு என்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதில் நம்மால் முடிவுக்கு வரவில்லை.இச்சூழலில் அக்கூட்டணி ஆட்சியை கைப்பற்றும், கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் சொல்வது ஒரு வயைான 'பில்டப்' . இந்த நொடி வரை தி.மு.க., கூட்டணிதான் கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அதிக சீட்களை கேட்போம்என சிந்திக்க முடியும். அவர்கள் குறைவான தொகுதிகளை கேட்போம் என சொல்ல வாய்ப்பில்லை தானே. நாங்களும் அப்படி தன் சொல்வோம். எல்லாரும் அப்படிதான் சொல்வோம். பேச்சுவார்த்தையின் போது சூழலுக்கு ஏற்ப நாங்கள்முடிவு செய்வோம். கம்யூனிஸ்ட் மட்டும் அல்ல தி.மு.க., கூட்டணியாக இருந்தாலும், அ.தி.மு.க., கூட்டணியாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமானது வாடிக்கையானதுதான்ஆனால், பேச்சுவார்த்தையில் இருக்கும் போது சூழலில் மனம் விடடு பேசி இறுதி முடிவு எடுப்போம். அனைத்தையும் கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுப்போம். கூடுதலாக சீட் கேட்பது வாடிக்கையான ஒன்றுதான். கிடைப்பது பேச்சுவார்த்தையின்போது தான் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

theruvasagan
ஜூன் 11, 2025 16:13

வடிவமே பெறாத அதிமுக கூட்டணியைப் பற்றி எதுக்கு பயப்படணும். வலுவாக இருக்கிற உங்க கூட்டணியில் இருந்து கொண்டே எதற்கு அவரு இவரை சந்திக்கலை என்று எதிர் கூட்டணியில் நடந்த நடக்காத விஷயங்களை சொல்லி புலம்பணும். உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கு. அப்படித்தானே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 05:56

சூழல் எற்ப என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். அந்த சூழல் தான் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.


புதிய வீடியோ