உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்: விஜய்

சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம் என இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேசியதாவது: இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம். அன்பும், கருணையும் தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டும் இருக்கிற மனது தானே தாய் மனசு. நமது தமிழக மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண் தானே, தாய் அன்பு கொண்ட மண் தானே. ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தானே? பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லாம் பண்டிகையும், எல்லோரும் சந்தோஷமாக, ஷேர் பண்ணிக்க கூடிய ஊர் தானே நம்ம ஊர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qjt4omui&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நல்லிணக்கம்

இங்க வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு, வேறு என்றாலும் நாம எல்லோரும் சகோதரர்கள் தானே? அதனால் தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகு, கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லி தர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை இருந்தால் மட்டுமே போதும், எந்த பிரச்னைகளையும் ஜெயிக்கும். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையின் வலிமையை பற்றி சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கிறது.

சகோதரர்களே!

அதை படிக்காதவர்கள் படித்து பாருங்கள். குறிப்பாக ஒன்று பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இளைஞருக்கு எதிராக, தன்னுடைய சொந்த சகோதரர்களே பொறாமைபட்டு, அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டனர், அதன் பிறகு அவர் எப்படி மீண்டு வந்து அந்த நாட்டிற்கே அரசன் ஆகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல, அந்த நாட்டையே எப்படி காப்பாற்றினார் என்ற கதை பைபிளில் இருக்கிறது. படிக்காதவர்கள் படித்து பாருங்கள்

எதிரிகளை…!

அந்த குறிப்பிட்ட கதை யாரை பற்றிய கதை என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால், கடவுளின் அருளும், மக்களை நேசிக்கிற அன்பும், அதிக வலிமையும், அதற்கான உழைப்பும் இருந்தால் மட்டுமே போதும், எவ்வளவு பெரிய ஒரு போராட்டமோ, போரோ, எதிரிகளையோ ஜெயிக்கலாம். இதை தான் இந்த கதைகள் நமக்கு உணர்த்துகிறது. இந்த விழாவில் ஒரு உறுதியை நான் கொடுக்கிறேன்.

வெற்றி நிச்சயம்

நாமும், தமிழக வெற்றிக்கழகமும் சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எந்த விதமான சமரசமும் இருக்கவே இருக்காது. அதனால் தான் நமது கொள்கைகளுக்கு மதசார்பற்ற கொள்கை என்று பெயர் வைத்தோம். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும். நம்பிக்கையுடன் இருங்கள்; வெற்றி நிச்சயம். இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. இவ்வாறு விஜய் பேசினார்.

தினமலர் நேரலை

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜயின் பேச்சு வீடியோவில் காண இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

kulanthai kannan
டிச 22, 2025 19:22

ஜோசப் விஜய் முகத்திரை கிழிகிறது.


கனோஜ் ஆங்ரே
டிச 22, 2025 18:42

////சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்-// இப்படி பேசியிருக்கியே உன்ன எப்படி நம்புறது... போன 3, 4 நாட்களுக்கு முன்புதான், ஈரோட்டில் பேசுறப்ப... “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை”..ன்னு கத்துன...? அன்றைக்கு ராத்திரியே உன் நாமக்கல் மாவட்டச் செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வீட்டு பெட்ரூம்ல நுழைஞ்சுட்டாரு...? “ஒரு தடவ சொன்னா, அப்புறம் என் பேச்சை நானே கேக்கமாட்டேன்”...னு வசனம் பேசி, உன் ரசிகர உசுப்பேத்திய காரணத்தால்... நீ மேடைல பேசுனதை அப்படியே உண்மையாக்கிட்டான், உன் கட்சி மாவட்டச் செயலாளர்...? அதுபோல... இப்ப என்னடான்னா... ///சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்-/// அப்படீன்னு சொல்ற... எப்புடி நம்புறது...? விவேக் காமெடி மாதிரி... “உன் மொகரையப் பார்த்தா அப்படி நடந்துக்குற மாதிரி தெரியலையே...?” விஜய்...


Sun
டிச 22, 2025 18:23

அண்மையில் கரூரில் இவரைப் பார்க்கப் போய் 41 அப்பாவி பொது மக்கள் பலியானது நாம் அனைவரும் அறிந்ததே இறந்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் கிறிஸ்துமஸ் விழாக்களை கொண்டாடுகிறார் விஜய். அன்றைக்கு தீபாவளி யாரும் கொண்டாடுவதை தவிர்த்தார்! தீபாவளிக்கு ஒரு நியாயம்? கிறிஸ்மஸ்க்கு ஒரு நியாயமா? ஜோசப் விஜய், மார்ட்டின் மருமகன், ஜான் ஆரோக்கியசாமி, புதிதாக ஒருவர் சேர்ந்திருக்கிறார் அவர் பெயர் பெலிக்ஸ் .பேசாமல் கட்சியின் பெயரை கிறிஸ்தவ வெற்றிக் கழகம் என மாற்றி விடலாம்.


V RAMASWAMY
டிச 22, 2025 17:57

ஒரு கிறிஸ்தவர் பைபிளை உதாரணமாகக் காட்டுவது சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டல்ல. அவர் பகவத் கீதையையும் திருக்குரானையும் சுட்டிக்காட்டிருக்கவேண்டும்.


Murthy
டிச 22, 2025 17:52

கிருஸ்தவர்கள் ஓட்டுக்காக ஒவ்வொருவரும் வேஷம் போடுகிறார்கள் .


Muralidharan S
டிச 22, 2025 17:31

இப்பொழுதே விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் ஆரம்பித்து, தீபாவளி பண்டிகை, கார்த்திகை தீபம் மற்றும் பொங்கல் பண்டிகை வரை ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன், நீதிமன்றங்களுக்கு எல்லாம் சென்று அனுமதி பெற்றுத்தான் கொண்டாட வேண்டிய நிலமையாக மாறிக்கொண்டு இருக்கிறது.. திமுகவுக்கு ஹிந்துக்கள் போடும் ஒட்டு தமிழகத்தை இஸ்லாமிய நாடக மாற்ற உதவும்.. அதுபோல விஜய்க்கு போகும் ஒட்டு.. மிஷனரிகள் ஆட்சிக்கு வழிவகுக்கும்.... பிரியாணிக்கும், கேக், குவாட்டர், இன்ன பிற இலவசங்கள் மற்றும் பணத்திற்கு கையை நீட்டாமல் , கொஞ்சமாவது சொரணையுடன் ஓட்டுப்போட வேண்டும்.. ஹிந்துக்கள் நிலைமை கையை விட்டு போகும் முன் நீண்ட உறக்கத்தில் இருந்து / டாஸ்மாக் மப்பில் இருந்து எழ வேண்டும்....


Madras Madra
டிச 22, 2025 17:30

ஜோசப் விஜயின் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்


Barakat Ali
டிச 22, 2025 17:21

சரியாக யோசிக்காமல் இதை பி டீமாக இறக்கிவிட்டோமே ???? கிறிஸ்தவ வாக்குகள் போய்விடுமோ ???? என்று திமுகவை கதற வைத்தது டிவிகே .... .


ram
டிச 22, 2025 17:15

திமுகவின் b டீம் என்று நிரூபித்து விட்டான், கரூர் இன்சிடெண்ட்டுக்கு தீபாவளி கொண்டதீர்கள் என்று சொல்லுவிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நன்றாக கொண்டாடுங்க என்று சொல்லுகிறான், அந்த கட்சியில் இருக்கும் ஹிந்துக்கள் உணர்ந்தால் நல்லது. இவனை ஆட்டிவைப்பது திருட்டு திமுக அண்ட் மிஸ்ஸியனிரிஸ்.


Chandhra Mouleeswaran MK
டிச 22, 2025 17:12

அது சரீங்க தலீவரு நீங்க சொல்ர "சமூக நல்லிணக்கம்" அப்டீங்கரது, "தம்மிள்ளு நாடு வெர்ஷன்": ஆ, இல்ல, "ஒர்ரிஜினல் வெர்ஷன்" ஆ? தம்மிள்ளு நாடு வெர்ஷன்னா, "இந்துக்களைக் கீழ தள்ளி மேல ஏறி நின்னுட்டு, "கிறிஸ்த்தவ இரத்த சொந்தங்கள்" அப்ரம் "இசுலாமியத் தொப்புள் கொடி சொந்தங்கள்" ரண்டையும் கட்டித் தளுவி உச்சி மோந்து சீராட்டரது உங்களோடது இதுதான?


புதிய வீடியோ