உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம்: கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் அதிரடி

நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம்: கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. யார் உண்மையை மாற்றி கூறினாலும் சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.கரூர், வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=anno995r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கோவில் செயல் அலுவலர் சுகுணா ஆஜராகினர். வருவாய்த்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'காலியாக இருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் உள்ள நிலம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நபர் பெயர்களில் வழங்கிய பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றார்.நீதிபதிகள், 'ஆவணங்கள் அடிப்படையில் மனுதாரர் கள ஆய்வு செய்யலாம். அதிகாரிகள் உள்ளிட்ட வேறு யாரும் ஆக்கிரமித்துள்ளனரா, பினாமி பெயரில் அச்சொ த்து உள்ளதா என ஆய்வு செய்யலாம். 'ஒட்டுமொத்த அரசுத்துறையும் ஒத்துழைக்க வேண்டும். அச்சுறுத்தல் வந்தால் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கலாம். 'நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. அதற்காக அரசுக்கு இறுதி வாய்ப்பு வழங்குகிறோம். 'யார் உண்மையை மாற்றி கூறினாலும், நிலத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறினாலும், சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம். யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. முயற்சித்தால் நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்' என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வருவாய்த்துறை ஆவணங்கள், அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அரசின் நடவடிக்கையில் முன்னேற்றம் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள ரிட் மற்றும் ரிட் மேல் முறையீட்டு மனுக்களை இவ்வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். வரும் காலங்களில் இவ்வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை நவ., 7க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திகழ்ஓவியன்
நவ 01, 2025 13:49

இந்த அரசு வந்து தான் நிறைய வளர்ச்சி இந்த துறையில் , கடந்த 10 ஆண்டுகள் இந்த மாதிரி நீதிமன்றங்கள் நேரடி ஆய்வுக்கு வந்திருந்தா, எவ்வ்லவோ நிலம் மீட்க பட்டிருக்கும்


visu
நவ 01, 2025 17:52

1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை என்று அரசே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கேட்டால் பெருமையா 6 முறை ஆட்சி செய்த கட்சி என்று சொல்லுரீங்க அப்ப காணாமல் போனதுக்கு பொறுப்பு எடுத்துக்கணும் இல்லையா


Sri Ra
நவ 01, 2025 11:48

என்னடா இது கழக ஆட்சிக்கு வந்த சோதனை.


kjpkh
நவ 01, 2025 10:17

எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியப்பா. திகட்ட திகட்ட முட்டுக்கொடுப்பவர்கள் வரலாம்.


Chandru
நவ 01, 2025 10:05

Hats off to Judges. But it s a pity that supreme court does nt consider your judgements at all. As a citizen of india we the public feel that supreme court has a feeling that the judges of HIGH COURTS have not studied law at all and go to deliver judgements in favour of MOST CORRUPT POLITICIANS


V RAMASWAMY
நவ 01, 2025 09:58

வரவேற்கத்தக்க அறிவிப்பு. குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகளின் இம்மாதிரி நடவடிக்கைகள் எல்லா குற்றங்களுக்கும் எல்லா இடங்களிலும் தேவை.


Devanand Louis
நவ 01, 2025 09:44

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார் என்பதைக் காண முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் வாய்க்கால்கள் உடைபடுதல், நீர் தேக்கம், மண் சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இத்தரக்குறைவான பணிகளுக்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் பணிகளின் தரம் கண்காணிக்கப்படாமல் போவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் பணிகளுக்குரிய மேற்பார்வை, சோதனை, மற்றும் தரச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் நகராட்சி பொறுப்பாளர்களால் முறையாக செய்யப்படவில்லை. மேலும் குறிப்பிடத்தக்கது, மழைக்காலத்தில் rainy season பணிகள் நடைபெறும் போது ஒப்பந்ததாரர் வாய்க்கால்களின் சுற்றுப்பகுதியில் மணல் நிரப்புதல் sand filling செய்யாமல் விட்டுள்ளார். இதன் காரணமாக பல இடங்களில் மண் தள்ளாடுதல், குழிகள் உருவாகுதல், மற்றும் நடைபாதைகள் sidewalks சரிவது போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம், துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கும். மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவும். குறிப்பாக, மரண் குழிகளை maran kulikalai உடனடியாக உண்டுபண்ணும் undupannum பொறுப்பை திருமங்கலம் நகராட்சி ஏற்று, உரிய தகடுகளால் மூடி, பணிகளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். நடவடிக்கை வேண்டியது: 1. ஒப்பந்ததாரரின் பணிகளைத் தரச் சோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும். 2. பணிகள் நடைபெறும் இடங்களில் மணல் நிரப்புதல் மற்றும் நடைபாதைகள் சரியாக அமைக்கப்பட வேண்டும். 3. திறந்த வாய்க்கால்களை தகடுகள் மூலம் மூட வேண்டும். 4. நகராட்சி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


Ramesh Sargam
நவ 01, 2025 08:40

நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம். இது மிக மிக நல்ல செயல். ஆய்வுக்கு பிறகும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், ஆளும் திமுக கட்சியை அகற்றவும் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவேண்டும். இப்பொழுது நீதிமன்றமே தலையிடுகிறது இந்த விஷயத்தில். அருமை.


அப்பாவி
நவ 01, 2025 07:53

களமிறங்குங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை