உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் போராடினாலும் வாழ்த்துவோம்: அன்புமணி போராட்டம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்

யார் போராடினாலும் வாழ்த்துவோம்: அன்புமணி போராட்டம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: அன்புமணி தலைமையிலான போராட்டம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி, யார் போராடினாலும் வாழ்த்துவோம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.விழுப்புரம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: வன்னியர் சமூக மக்களுக்காக மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். 1980ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறோம். நமது போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. முழுமையாக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். சம உரிமை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகிறோம். இன்னும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.அன்புமணி தலைமையிலான போராட்டம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி யார் போராடினாலும் வாழ்த்துவோம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார். ஒட்டு கேட்பு கருவி குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''ஒட்டு கேட்கும் கருவி குறித்து விசாரணை நடக்கிறது. ஒட்டு கேட்டு கருவி வைத்தது குறித்து சந்தேகம் இருக்கிறது. போலீசாரிடம் சொல்லி இருக்கிறோம்'' என ராமதாஸ் தெரிவித்தார். பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு உண்டா என்ற கேள்விக்கு, ''யார் வேண்டுமானாலும் வரலாம். மகளிர் பங்கேற்கலாம். எல்லோரும் பங்கேற்கலாம்'' என ராமதாஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
ஜூலை 20, 2025 20:10

தாத்தா காமெடி தாங்கமுடியவில்லை


Jack
ஜூலை 20, 2025 14:10

மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு உண்டா? காமெடி பண்ணலியே


Nia
ஜூலை 20, 2025 14:09

this is your master plan


Jack
ஜூலை 20, 2025 13:47

சமூக நீதி என்றால் என்ன ? திராவிடம் மாதிரி வெங்காயமா ?


Anantharaman Srinivasan
ஜூலை 20, 2025 13:39

பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு உண்டா..? இன்னும் எங்கள் உட்கட்சி சண்டை நீருபூத்த நெருப்பா தானிருக்குயென்று வெளிப்படையாக சொல்லமுடியுமா.??


சமீபத்திய செய்தி