உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் வீட்டை முற்றுகை இடுவோம்; அண்ணாமலை பரபரப்பு பேட்டி

முதல்வர் வீட்டை முற்றுகை இடுவோம்; அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சென்னை: 'இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். முதல்வர் வீட்டை கூட முற்றுகை இடுவோம்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக, போராட்டத்திற்கு செல்லும் வழியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நானும் பா.ஜ., நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்து விடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்கு செல்லும் பா.ஜ.,வினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f02zmph6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரூ.40 ஆயிரம் கோடி

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலின் முதல் குற்றவாளி. செந்தில் பாலாஜி 2வது குற்றவாளி தான். ஒரு அமைச்சருக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. போலீசாரின் மீது நம்பிக்கை இருந்ததால் தேதி அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தோம். இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். அப்போது என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.

நல்ல அரசியல்

பா.ஜ., மீதான பயத்தின் காரணமாக போராட்டம் தடுக்கப்படுகிறது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். ஊழல் செய்யவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். பயம் இருந்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் நல்ல அரசியலை கொண்டு வர பா.ஜ., போராடுகிறது.

கைது

முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., சந்திக்க உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். பேட்டி அளித்து விட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Mahendran Puru
மார் 17, 2025 21:34

செய்திகளை விட கமெண்டுகள்தான் ருசிகரம். புரிதலோ ஆழ் சிந்தனையோ இல்லாமல் கட்சி சார்ந்து வரும் பதிவுகள் நல்ல காமேடி. எப்படியோ அரவக்குறிச்சி ஆருத்ரா அ மலை நல்ல நல்ல ...உருவாக்கியுள்ளார்.


N DHANDAPANI
மார் 17, 2025 18:25

ஆனால் மக்கள் சிந்தித்து மாறுவதுதான் நல்லது


K.Ramakrishnan
மார் 17, 2025 17:58

முற்றுகை யிட்டாலும், முட்டி போட்டாலும்,சவுக்கடி வாங்கினாலும், காலில் செருப்பு போடாவிட்டாலும், சட்டை அணியாவிட்டாலும், .சரி.. தமிழ்நாட்டில் தாமரை மலராது.


Balaji Radhakrishnan
மார் 17, 2025 18:53

Wait and see Don't write too much. It is a waste of time.


Bala
மார் 17, 2025 21:01

சுடலைக்கு திஹார் சிறை ரெடியாயிட்டு இருக்குதாம். இந்தி கூட்டணி லாலுவிடம் ஆலோசனை கேட்டு இந்தி கற்றுக்கொள்ள புஸ்தகம் வாங்கியிருக்காராம்


சொல்லின் செல்வன்
மார் 17, 2025 16:59

தப்பு பண்ற எல்லோரையும் உங்க கிட்ட இருக்கற சாட்டையால அடிங்கண்ணே.


INDIAN Kumar
மார் 17, 2025 15:48

அண்ணாமலை நெருப்புடா பொசுங்கி போவீர்கள் எல்லாம் வல்ல இறைவன் நின்று கொல்வான்


INDIAN Kumar
மார் 17, 2025 15:46

போராடும் கம்யூனிஸ்ட்கள் சில பதவிக்காக வாய் முடி மவுனம் அனுசரிக்கின்றன துடைத்து எரிய பட போகிறார்கள்.


INDIAN Kumar
மார் 17, 2025 15:45

திராவிட கூட்டணி கட்சிகள் பேந்த பேந்த விழிக்கின்றன அவர்களும் எவ்வளவுதான் முட்டு கொடுப்ப்பார்கள் .


Barakat Ali
மார் 17, 2025 15:36

அண்ணே ...... முதல்ல நீங்க டி எம் கே ஃபைல்ஸ் 3 ரிலீஸ் பண்ணுங்க .....


தமிழன்
மார் 17, 2025 15:32

இன்னுமா இந்த கட்சியை நம்புகிறீர்கள்.. ஆட்சிய கலைக்க பாஜக தயங்குவது ஏன்? சட்டம் நிர்வாக சீர் கேடு, பாலியல் பிரச்சனைகள், அங்கங்கே கொலை, காவல் நிலையத்திலேயே என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை மொத்தத்தில் எதுவுமே சரியில்லை எல்லா துறையிலும் நிர்வாகம் சரியில்லை, மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை. மாணவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை, பொய்யான தவறான தகவல்களை அரசு வெளியிடுவது என பல அடுக்கடுக்கான குற்ற சாற்றுக்கள் இருந்தும் சறுக்கி விழுகின்ற திமுக அரசை இன்னும் தூக்கி பாஜக பிடிக்கிறதே ? மக்களை பாஜகவும் வஞ்சிக்கிறதா ? இதன் பிறகும் பாஜக திமுக வை ஆட்சி செய்ய அனுமதித்தால், மக்களை வஞ்சிப்பது பாஜக என்பது போல ஆகிவிடும். மக்கள் புரட்சி வருவதற்கு முன். மத்திய அரசு மௌனம் கலைக்க வேண்டும். திமுக இல்லாத தமிழகம் அமைய வேண்டும்.


தமிழன்
மார் 17, 2025 15:27

தமிழக காவல் துறையை தனியார் மாயம் ஆக்கி விட சொல்லுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை