உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஆவேசம்

டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஆவேசம்

சேலம்: ''சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்; டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என, சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சேலத்தில் நடைபெற்ற விழாவில், 1,649.18 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: அண்மையில் மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அரசியல் பேசி, இந்த ஆட்சியை குறைசொல்லி இருக்கிறார். அதனால் அரசியல் பேச வேண்டிய கட்டாயத்தில், இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yayyk0fj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அரசின் நிதியை மடை மாற்றுவதாகக் கூறி இருக்கிறார். பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் குடிநீர், வீடு கட்டுவது என எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு 50 சதவீத நிதியை, மாநில அரசு ஒதுக்கிதான், அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 'படையப்பா' படத்தில், 'மாப்பிள்ளை அவர்தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ஒரு காட்சி வரும். அதுபோல் தான் மத்திய அரசு பெயரிலான திட்டங்களுக்கும், நாங்கள் நிதி வழங்கிக்கொண்டு வருகிறோம். ஆனால், எந்த அடிப்படையில் மடைமாற்றம் செய்கிறோம் என அமித் ஷா குற்றம் சாட்டுகிறார். மதுரையில், 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட 'எய்ம்ஸ்' எந்த நிலையில் உள்ளது என சென்று பார்த்தீர்களா? அது மருத்துவமனையா? அல்லது விண்வெளி ஆராய்ச்சிக்கூடமா? 11 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அதை சொல்லவே மாட்டேன் என்கிறீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.இந்த நிலையில், 2004ம் ஆண்டையும் 2025-ம் ஆண்டையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறீர்கள். அன்று இருந்த பட்ஜெட் என்ன? இப்போது இருக்கக்கூடிய பட்ஜெட் என்ன? அன்று தங்கம் பவுனுக்கு 5,000 ரூபாய்; இன்று, 71,000 ரூபாய்.இன்னொரு மத்திய அமைச்சர் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கையை திருத்தச் சொல்கிறார். இரும்பின் தொன்மையை கண்டறிந்த, தமிழகத்தை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; அங்கீகரிக்கவே இல்லை. தமிழகத்தின் தொன்மை, பண்பாட்டை அழிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது.அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவருக்கு, அதை தட்டிக்கேட்க துணிச்சல் இல்லை. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் அவரை, மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பார்கள். பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார் அமித் ஷா; சுயநலத்துக்கு கட்சியை அடமானம் வைத்த பழனிசாமி மவுனமாக இருக்கிறார். சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள். உறுதியோடு சொல்கிறேன்.டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நெருக்கடிகளை மீறி நெருப்பாற்றில் நீந்தி தமிழகத்தை உயர்த்தி வரும் திராவிட மாடல் அரசுக்கு, 2026லும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

என்றும் இந்தியன்
ஜூலை 05, 2025 18:16

சென்னையிலிருந்து மதுரை திருச்சி ........யை ஆள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். என்ன அறிவிலே இது சரியா இருக்கா


samvijayv
ஜூலை 04, 2025 10:20

திமுகவின் தலைமை இறந்த பின் அந்த தலைமையை தனதுக்கு ஆக்கியவரே.., அவர்கள் டெல்லியிலிருந்து ஆளுகிறேன் என்று கூறவில்லை தமிழகத்தில் முறையாக தேர்தல் நடத்தி எப்படி முறையாக மீண்டும் ஒருமுறை முறையாக தேர்தல் நடத்தி வெற்றி பெறுவோம் என்று தான் குறிக்கொண்டு உள்ளார்கள் அதை விடு முதலில் அதிமுகவை எதிர்கொள்ள உங்களுக்கு பலம் உண்டா?.


xyzabc
ஜூன் 24, 2025 11:47

திராவிட மாடல் அரசை பாகிஸ்தானில் இருந்து ஆள வேண்டுமா?


Gnanasiddhan
ஜூன் 17, 2025 07:06

பிடிக்காத படிக்காத அறிவிலி ஆட்சியை விட படித்த பிடித்த அறிவாளி ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் கருதுகின்றனர்.


சிட்டுக்குருவி
ஜூன் 16, 2025 18:52

இதே மாதிரி சென்னையில் இருந்து மதுரையை ஆள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று மதுரைக்காரர் சொல்லலாமா ?


Matt P
ஜூன் 15, 2025 10:32

மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் இருந்தாலும்,மத்தியில் இன்னொரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு மாநில ஆட்சியையும் கண்காணிக்கவும் தேவையானால் கலைக்கவும் உரிமை இருக்கிறது. மாநிலத்தில் தேவைப்படும்போது சட்டம் ஒழுங்கை நிலை நாட்டை ராணுவத்தை கூட அனுப்புவார்கள். மத்தியில் இருந்து கொண்டு ஒட்டுமொத்தமாக இந்தியாவை ஆள்கிறார்கள். நீ சொல்வதெல்லாம் மாநில சுயாட்சி வந்தால் பார்த்து கொள்ளலாம். மத்தியின் கட்டுப்பாடு இருப்பதால் தானே மாநில சுயஆட்சியே கேட்கிறீர்கள். என்ன பேசினாலும் கடிவாளம் அவர்கள் கையில் தான். .


M Ramachandran
ஜூன் 14, 2025 11:26

இதுவரைய தமிழ் நாட்டை அந்த முதல்வர்கிளிலேயெ மோசமான ஆட்சியை என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். செந்தில் பாலாஜி முதல் பல அமைச்சர்களும் ஊழலில் சிக்கி சாந்தி சிரிக்குது. உங்க உச்சிமுகர்ந்து புளகாங்கீதம் அடைந்த உங்க இளவல் கழுத்தில் தொங்க்குது. நீங்க உங்க குடும்ப ஊழ லால் டில்லிக்கு காவடி தூக்கி சென்ற விவரம் ஊடகங்களில் சந்தி சிரிக்குது. இதில் வீர வசனம் எதற்கு? மடியிலே பாரங்ககல் தினம் விடியும் போது பயத்துடன் விடியுது. ஆர்ம்பதிலிருந்தே யோசிக்காம மத்திய அரசை கீழ் தரமாக விமர்சித்து வெறுப்பை சம்பாதித்து கொண்டீர்கள். கடைய்யசி நேரத்தில் காவடி எடுத்து என்ன பயன்? முத்து வேலால் கருணாநிதியின் பைய்யன் என்று கூற மட்டும் தெரிந்த உங்களுக்கு அவரின் நெளிவு சுளுவு அரசியல் தெரியலேயாயெ. அவர் பேச்சு திறமைய்ய எங்கே உஙகள் புலமைய்ய தெரிந்ததே. எதிர்த்து வந்த மம்தாவே ஜகா வாங்கி விட்டார். உஙக சில அனுபவம் போறது. குடி படை களை வைத்து பொய் பிம்பம் ஏர் படுத்துவது வேலைக்கு ஆகாது


c.mohanraj raj
ஜூன் 13, 2025 22:04

அருமையான காமெடி


surya krishna
ஜூன் 13, 2025 19:09

vaai sollil veeran, matrapadi mandayil masala onnum illai


Loganathan Balakrishnan
ஜூன் 13, 2025 18:44

இவங்களோட அசைக்க முடியாத ஓட்டு வங்கி ஒரு பிரிவினர் இருக்கிறாரகள் அதனால் தான் இவர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெறுகிறார்கள் அவர்களுக்கு உண்மை புரிந்தால்தான் தமிழ்நாட்டுல மாற்றம் வரும் இல்லையேல் நமக்கு விடிவு காலமே இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை