உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்

தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை நேற்று நள்ளிரவு போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.https://www.youtube.com/embed/PjbW0EZ0R4Aஇந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு தூய்மைப் பணியாளர்களுக்காக தமிழக அரசு 6 சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து, தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவுகுழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைசுயதொழில் உதவிநல்வாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதிதூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு! இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

rasaa
ஆக 15, 2025 11:39

தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளையடிக்க திருமதி மேயர் பாபு திட்டம்.


theruvasagan
ஆக 15, 2025 10:30

வேலைநிறுத்தம் செய்பவர்களை பட்டப்பகலில் கைது செய்தால் அது அவர்களுக்கு அவமானம் என்று கருதி நடுநிசியில் போய் கைது செய்தோம். தொழிலாளர் மாண்பினை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஆக 15, 2025 05:17

முதல்வர் அறிவித்துள்ள எல்லா சலுகைகளும் கானல்நீர் சலுகைகள். எதுவும் நிரந்தர, நிச்சய பலன்களை தராது. இதிலிருந்து விடியல் அரசின் மோசமான எண்ணம் தெரிகிறது.


surya krishna
ஆக 15, 2025 04:40

வெத்துவேட்டு கோவாலு


Chandru
ஆக 14, 2025 23:27

இவ்ளோ முட்டாளாகவா இருப்பார் ஒரு முதல் அமைச்சர் என்பவர் ?????


Ragupathi
ஆக 14, 2025 23:03

இரண்டு மண்டலத்திற்கு ஆந்திரா கம்பெனிக்கு பராமரிப்பு கட்டணம் வருடத்திற்கு 2350 கோடிகள் இதுல கமிஷன் யார் யாருக்கு எத்தனை கோடிகளோ. சம்பளத்திற்கும் வண்டிகளுக்கும் எவ்வளவு ஆகும்?


R.MURALIKRISHNAN
ஆக 14, 2025 22:53

நீர் சொல்வது மக்களுக்கு, தூய்மை பணியாளர்களையும் விட மாட்டோம் என்று தான் கேட்கிறது சர்வாதிகாரி


R.MURALIKRISHNAN
ஆக 14, 2025 22:51

40% கமிஷன் அடிக்கற மாதிரி திட்டம் தீட்ட வேண்டாமா? அதுக்கு டைம் ஆயிருக்கும்


C.SRIRAM
ஆக 14, 2025 22:35

மாண்பை விட்டு கொடுக்காமல் தான் போலீஸ் நடவடிக்கையா ?. உளறல் . இவ்வளவு மட்டமான அரசியல்


vbs manian
ஆக 14, 2025 22:07

உங்களுடன் திட்டம் நடைபெறும்போது இவர்களுடன் இவர் இல்லையே.