உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் சுரங்கம் அமைக்க அனுமதி தர மாட்டோம்

மதுரையில் சுரங்கம் அமைக்க அனுமதி தர மாட்டோம்

சென்னை:''மதுரையில் சுரங்கம் அமைக்க அனுமதி தர மாட்டோம்'' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வனத்துறை நிலங்களில் சாலைப்பணி மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.வனத்துறை அனுமதி பெற்று பல கோவில்களில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. சில கோவில்களில் அனுமதி பெறாமல் பராமரிக்கப்படுகின்றன. திருச்செந்துார் கோவிலில் தெய்வானை யானை, வனத்துறை அனுமதி இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்று யானைகளை பராமரிப்பது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறையிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.மதுரை, மேலுார் அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அங்கு, 250 வகை பறவைகள் உள்ளன. வெள்ளை வல்லுாறு, ராஜாளி பறவைகளும், பல புதிய பறவை இனங்களும் அங்கு வசிக்கின்றன. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரிட்டாபட்டி வனப்பகுதி, உயிர் பன்முகத் தன்மை கொண்ட நிலமாக, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.அங்கு சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஆலை அமைக்க அனுமதி கேட்டு, வனத்துறையிடம் விண்ணப்பிக்கும் போது, உரிய காரணங்களை கூறி நிராகரிப்போம்.இவ்வாறு பொன்முடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ