உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: ஓ.பி.எஸ்.,

தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: ஓ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' இன்னும் தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம் , என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியில் நீடிக்க முடியாத நிலைக்கு ஆளான பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.அவருடன், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ராஜ்யசபா எம்.பி., தர்மர் ஆகியோர் உள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க., உடன் பா.ஜ., கூட்டணி அமைத்து உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sxnr89gb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலர்களுடன், சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இன்றும் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது; நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நீடிக்கிறேம். கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. விரைவில் மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்த உள்ளோம். சென்னை வந்த அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமே. அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமானதே. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்காலிகமாக தான் அந்த சின்னம் அ.தி.மு.க.,விற்கு கிடைத்தது. யார் விரும்பினாலும் விரும்பாவிாட்டாலும் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Senthil Kumar
மே 15, 2025 21:54

அய்யா நீங்கள் ஒரு தலைவரா, அமித்ஷா உங்களை சந்திக்காமல் சென்றதற்கு நீங்கள் கோவம் தான் பட வேண்டும் ஆனால்.... நீங்கள்....


மோகனசுந்தரம்
மே 15, 2025 20:57

ஐயோ பாவம் பன்னீர். இன்னுமா பிஜேபியை நம்புகிறீர்கள். அண்ணாமலை இருந்த வரையிலும் நீங்கள் எதிர்பார்த்தது நல்லது. இனி உங்கள் வழியை பார்த்துக் கொண்டு போவது எல்லோருக்குமே நல்லது.


Gnana Subramani
மே 15, 2025 19:21

பிஜேபி யை நம்பி ஏமாந்தவர்களுக்கு தர்ம யுத்தம் ஒரு சரியான உதாரணம்


kr
மே 15, 2025 19:08

OPS should now join BJP. His rebel group doesn’t seem to have the strength to unseat EPS anymore. Also, after the announcement of the alliance with BJP, ADMK and EPS are showing lot more confidence about returning to power in 2026.


மனி
மே 15, 2025 18:04

இன்னும் இந்தாளு இருக்குதா


sridhar
மே 15, 2025 17:41

ஆளே இல்லாத கடைக்கு டீ போடுராராமாம்


நிவேதா
மே 15, 2025 17:40

மகிழ்ச்சி. ஒபிஸ் அணிக்கு மற்றும் தினகரன் கட்சிக்கு பிஜேபி தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒருசிலவற்றை கொடுக்கலாம்


புதிய வீடியோ