உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறக்கட்டளையை மீட்டு வாரியத்திடம் சேர்ப்போம் ராமதாசுக்கு எதிராக போர்க்குரல்

அறக்கட்டளையை மீட்டு வாரியத்திடம் சேர்ப்போம் ராமதாசுக்கு எதிராக போர்க்குரல்

சென்னை: ''ராமதாசிடம் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்டு, வாரியத்திடம் ஒப்படைப்போம்,'' என, வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: வன்னியர் கூட்டமைப்பு சார்பில், இச்சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டி, சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். உள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னும், அதை செயல்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதேபோல், வன்னியர் சமூகத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும், பொதுச் சொத்து நல வாரியமும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. இச்சமூகத்திற்கு சொந்தமாக, 240 அறக்கட்டளைகள் தமிழகம் முழுதும் உள்ளன. ஆனால், இதன் வாயிலாக, ஒரு வன்னியர் கூட பயன் பெறவில்லை. ராமதாஸ் உள்ளிட்ட பலர், வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை கையகப்படுத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் கீழ் வரும் பள்ளி, கல்லுாரி மற்றும் திருமண மண்டபங்கள் என, பலவற்றை ராமதாஸ் தன் பெயருக்கு மாற்றியுள்ளார். இதே நிலைமை நீடித்தால், வன்னியர் சமூக மக்களை திரட்டி, ராமதாசிடம் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்டு, வாரியத்திடம் ஒப்படைப்போம். எனவே, இச்சமூக மக்களை, இவ்வாரிய தலைவராக நியமித்து, இது போன்ற முறைகேடுகளை, அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை