உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வீழ்த்த விஜய் வந்தாலும் வரவேற்போம்

தி.மு.க.,வை வீழ்த்த விஜய் வந்தாலும் வரவேற்போம்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு துவங்கி, ஒன்றரை ஆண்டுகளில் முழுமைஅடையும். இக்கணக்கெடுப்பை, ஒரு அரசியல் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகின்றனர். அதை நடத்தினால், சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசுவதில்லை. ஆனால், மத்திய அரசு ஏமாற்றுவதாக பிரசாரம் செய்கின்றனர்.வி.சி., தலைவர் திருமாவளவன் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒரு கண்துடைப்பு என்கிறார். அவர் கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பா அல்லது ஆதரவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதுவரை இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் செய்தது கபட நாடகம். ஆனால், கணக்கெடுப்பிற்கு பல தரப்பிலும் ஆதரவு உள்ளது. இதன் வாயிலாக, பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பல சமுதாயங்களுக்கு நன்மை ஏற்படும். சமூக நீதி நிலைநாட்டப்படும். சீர்மரபினரும், ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பயனடைவர்.தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறக்கூடாது என யார் கருதினாலும், அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். தி.மு.க.,வை வீழ்த்த, நடிகர் விஜய் வந்தாலும் வரவேற்போம். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இருந்தாலும், கூட்டம் சேர்கிறது. சேரும் கூட்டம் என்பது வேறு; ஓட்டு என்பது வேறு. இதை அவர் புரிந்து அரசியல் செய்ய வேண்டும். -- ராம ஸ்ரீனிவாசன்பா.ஜ., மாநில பொதுச்செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vetrivel iyengaar
மே 04, 2025 10:48

கூட்டம் வேறாம் .... வோட்டு வேறாம் .....அப்போ எதுக்கு இப்படி பிடித்து தொங்கறீங்க ???? அதாவது கிண்டலும் செய்வானுங்களாம் ...... கூட்டணிக்கும் வரணுமாம் என்ன ஒரு மானம் கெ ட்ட பொழப்பு மொத்தத்துல அடுத்தவனுங்க முதுகுல ஏறி ஓசி சவாரி செய்யணும்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:44

எப்படி வருவாரு ?? அவரு குடும்பக் கட்சியால் இறக்கப்பட்டவர் ....


xyzabc
மே 04, 2025 09:56

பணத்துக்காக வோட்டை போடும் மக்கள். நினைவில் இருக்கட்டும்.


BHARATH
மே 04, 2025 09:54

அப்படி அவன் வந்தா என் ஓட்டு தி மு க தான்.


Rajan A
மே 04, 2025 06:46

தன்னம்பிக்கை இல்லை


சமீபத்திய செய்தி