உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம்: பிரேமலதா அறிவிப்பு

தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம்: பிரேமலதா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, என் அடுத்த பிறந்த நாளில் அறிவிப்பேன்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தன் 56வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி, கோயம்பேடில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்; தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளில் ஒன்றைக் குறைத்தாலும், தமிழக மக்களுக்காக, அரசுடன் சேர்ந்து, தே.மு.தி.க., போராடும். தமிழக மக்கள் நலன் சார்ந்த சில விஷயங்களில், தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, என் அடுத்த பிறந்த நாளில் அறிவிப்பேன். தற்போதைய கூட்டணியில், எந்த குழப்பமும் இல்லை; நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் கட்சியை வளர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறோம். வரும் ஏப்., மாதத்தில், தருமபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க.,வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில், தமிழகத்தின், 234 தொகுதிகளுக்கும், பொறுப்பாளர்கள், 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்க உள்ளோம். வரும் தேர்தலில், தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.எந்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த, தி.மு.க., அரசு அனுமதி அளிக்க வேண்டும். நான்கு ஆண்டு ஆட்சியில், நிறைகளும், குறைகளும் உள்ளன. எனவே, குறைகள் இல்லை என, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Ramesh
மார் 25, 2025 07:50

திரு விஜயகாந்த் மட்டுமே ஓர் ஒப்பற்ற மாமனிதர்..அவருக்காகவே தேமுதிக என்கிற முத்திரை ஜொலித்தது எப்பொழுது உறவுகளின் தலையீடு அதிகரித்ததோ அன்றே வீழ்ந்தது கட்சி மட்டுமல்ல திரு விஜயகாந்த் அவர்களும் தான்.இப்பொழுது கட்சியை தக்கவைத்துக் கொள்ள கொள்கையை விட்டுக்கொடுத்து வீழப்போகும் கட்சியுடன் கூட்டணி மூழ்கி கொண்டிருக்கும் படகில் பயனிக்க நினைப்பதாகும்


Ramlal
மார் 20, 2025 10:50

விஜயகாந்தின் கொள்கையே திமுக எதிர்ப்பது நமது பிரதமருக்கு ஆதரவளிப்பது அதாவது நல்லவர்களுக்கு ஆதரவளிப்பது. இவர் கட்சிக் கொள்கையை மாற்றிவிட்டார் என்றால் இது இனி விஜயகாந்த் கட்சி அல்ல


Ramlal
மார் 20, 2025 10:49

விஜயகாந்த் அவர்கள் திமுகவை கடுமையாக எதிர்த்தவர் அந்த காலத்திலேயே இந்த அம்மா பணம் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு சப்போர்ட் செய்தவர் விஜயகாந்தின் வாயை அடைத்தவர். இவருக்குத் தெரியாத ஒரு விஷயம் நிறைய விஜயகாந்தின் விசிறிகள் அவர் குணத்திற்காக வந்தவர்கள் அவர்கள் இவர்களது குணம் பார்த்து விலகி இன்று பாஜகவில் தான் உள்ளனர் இவருக்கு ஓட்டு விழாது


நரேந்திர பாரதி
மார் 20, 2025 03:46

அதுக்கு பேசாம நாலு தெருவுல......செஞ்சு பிழைக்கலாம்


K.Ramakrishnan
மார் 20, 2025 00:00

முதல்வர் ஸ்டாலின் அவர்களே... வேண்டாம் விஷப்பரீட்சை. பூனையை மடியில் கட்டிக்கொள்ளாதீர்கள்.


தேவராஜன்
மார் 19, 2025 18:57

தாயி, சிங்கப்பூர் எப்போ போவீங்க?


RAAJ68
மார் 19, 2025 18:48

ஏன் வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாது. திமுக ஊழல் கட்சி என்று சொன்னீர்கள். இப்போது காசு எங்கு கிடைக்கிறதோ பச்சோந்தியாக அங்கே போவீர்கள். நீங்கள் போகும் இடம் எல்லாம் தோல்விதான்.இதுவும் ஒரு விதத்தில் நல்லது.


R.P.Anand
மார் 19, 2025 16:48

அப்போ அந்த கல்யாண மண்டபம் இடிப்பு ஓகே


Ramesh Sargam
மார் 19, 2025 16:40

சேர்ந்து உறவா?


Ganesun Iyer
மார் 19, 2025 12:31

ஆக, மணவாடு.. மணவாடு மஞ்சினவாடு ஆயிட்டாங்க.. கேப்டனின் ஆத்ம இவர்களை மன்னிக்கட்டும். தியமுகவுக்கு எதிரான எம்ஜிஆர், ஜெயலிலதா, கேப்டன் மறைவும், வைகோ, பிரேமலதா மற்றும் சின்னமா ஆதரவும் இயற்கையின் விளையாடல்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை