முகக்கவசம் அணிவது கட்டாயம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா தொற்று பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cjkboloe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நோய் பரவலை தடுப்பது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.கைகளை சுத்தமாக கழுவுதல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், இருமும்போதும், தும்மும்போதும், வாய், மூக்கு பகுதிகளை முழுமையாக மூடிக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.