உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை

மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக, 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையில், 15; திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 10; நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nallavan
நவ 19, 2024 09:15

இந்த பாட்டு இப்போ பாடினால் :அடை மழை வரும் அதில் நனைவோமே… குளிர் காய்ச்சலோடு சிநேகம்… ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்… எங்கேயும் போகாமல்… தினம் வீட்டிலேயே நீ வேண்டும்… சில சமயம் விளையாட்டாய்… உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்… வசீகரா என் நெஞ்சினிக்க… உன் பொன் மடியில் தூங்கினால் போதும்… அதே கணம் என் கண்ணுறங்கா… முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…


முக்கிய வீடியோ