உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழைக்காலத்தில் பாதுகாப்பா இருக்க இதையெல்லாம் செய்யுங்க!

மழைக்காலத்தில் பாதுகாப்பா இருக்க இதையெல்லாம் செய்யுங்க!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. மழைக்காலங்களில் அனைவரும் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பது, எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விபரங்களை காணலாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y54i9w0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மழை காலங்களில் இடி, மின்னல் அதிகம் இருக்கும் என்பதால், இடியின் சப்தம் கேட்டாலே வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்திலேயே இருங்கள்.* அந்தந்த மாவட்டங்களில் மழை தொடர்பான அப்டேட்கள், எச்சரிக்கைகளை அறிந்து அதன்படி செயல்படுங்கள்.* முடிந்தளவு வீட்டில் அல்லது அலுவலகம் என எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே மழை நிற்கும் வரை இருங்கள்; வாகனங்களில் பயணிப்பதை தவிருங்கள்.* அனைத்து ஜன்னல்கள், கதவுகளை மூடி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளியே அல்லது பால்கனியில் வைத்திருக்கும் பொருட்களை வீட்டினுள் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.* உங்கள் குழந்தைகள், வளர்ப்பு உயிரினங்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.* மழைக்காலங்களில் வீட்டில் இருப்பது பாதுகாப்பை உறுதி செய்யும். தேவையற்ற இடங்களுக்கு மழைக்காலத்தில் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.* முக்கியமான எலக்ட்ரிக் சாதனங்களை துண்டித்துவிடுங்கள். மின்னல், புயலின்போது மெயின் பவர் சப்ளையில் ஏற்படும் பாதிப்புகள் எலக்ட்ரிக் சாதனங்களை பழுதாக்கக்கூடும்.* மழைக்காலத்தில் மின்கம்பம் இருக்கும் இடங்களுக்கு செல்லக்கூடாது. ஈரமான இடத்தில் மின் பொத்தானை அழுத்தவோ அல்லது தொடவோ கூடாது. கால்நடைகளை மின்கம்பத்தில் கட்டக் கூடாது. * மழை நேரங்களில் குளிப்பதை தவிருங்கள். உலோக பைப்கள் வழியாக மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால், ஓடும் தண்ணீரில் இருந்து ஒதுங்கியே இருங்கள். * இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
அக் 15, 2024 17:57

பாதுகாப்பு என்பது விபத்தில் இருந்தது தப்பிப்பது மட்டும் அல்ல. உடல் நிலை நன்றாக இருக்கவேண்டும். இதில் கவனம் செலுத்துவதில்லை. முதலில் இரவு 9 மணிக்கு தூங்கசெல்லவேண்டும். குப்பற மல்லாந்து படுக்கக்கூடாது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து 6 மணிக்குள் குளிக்கவேண்டும் பல் துலக்குவது படிப்பது சாப்பிடுவது எல்லாம் உட்கார்ந்து செய்யவேண்டும். தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் எப்படி குடிக்கவேண்டும் என்பதனை சிறுவயதில் இருந்து பழக்கப் படுத்த வேண்டும். வரலாறு கணக்கு மொழி பாடங்கள் போல் வாழ்க்கை நெறி என்ற பாடம் அவசியம்.


தமிழன்
அக் 15, 2024 17:48

சோலார் வாங்க சொல்லுங்க.. இப்போ தான் ஜெயிலில் இருந்து செந்தில் பாலாஜி ஜாமினில் வந்து மீண்டும் மின் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று உள்ளார். சோலார் ப்ராஜெக்ட் அங்கங்கே போட திட்டம் வைத்து இருக்காங்க.. இப்போ கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பெரிய சோலார் ப்ராஜெக்ட் வருது.. மக்கள் நாம எல்லாம் சோலார் வாங்கினால் தான் பாவம் செந்தில் பாலாஜி போன்ற பின் தங்கிய அமைச்சர்கள் சொத்து சேர்த்து பெரிய செல்வந்தராகி, திமுக சார்பாக தமிழக முதல்வராக வருங்காலத்தில் பொறுப்பு ஏற்று மக்களுக்கு சேவை செய்ய முடியும். அவர்களை பணக்கார்களாக்க மக்களாகிய நம்மால் மட்டுமே முடியும் என்பதால் எல்லோரும் சோலார் பேனல் வாங்கி ஜாக்கிரதையாக இருக்கவும், அண்ணன் செந்தில் பாலாஜி வளமுடனும் வான் உயர செல்வ செழிப்புடனும் வாழந்து திமுகவின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்று மக்களை வழி நடத்த வாழ்த்துவோம்.