உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தீபாவளிக்கு பின் வானிலையில் மாற்றம் நிகழும்

தமிழகத்தில் தீபாவளிக்கு பின் வானிலையில் மாற்றம் நிகழும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் உள்பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு, இது தொடரும். அத்துடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அக்., 31க்கு பின், வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அதனால், நவ., 1 முதல், சில மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, பிற மாவட்டங்களுக்கும் விரிவடையும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
அக் 30, 2024 11:46

என்களு டய்ய தண்ணீர் தேங்கும் ப்ரிச்சனையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அப்பொறம் என்ன ஆள விடுங்க.


angbu ganesh
அக் 30, 2024 09:45

அப்போ அடிக்கடி நடக்கும் சாவு ஊர்வலத்துக்கு, இந்த அரசியல் வியாதிங்க வந்ததுங்கனா காலை 11 மணிக்கு வரவனுங்கள வரவேற்க காலை 10 மணியில் இருந்தே பட்டாசு வெடிக்கறானுங்களே அப்போ எல்லாம் உங்க கை வாய் ஏன்ன .....


அப்பாவி
அக் 30, 2024 06:25

என்ன மாற்றம்? ஊரெல்லாம் புகை மண்டலமா இருக்கப் போகுது. மனிஷன் வீதியில் நடமாட முடியாம குப்பையும் செத்தையுமா போகப் போகுது. மழை பெஞ்சுதுன்னா ப்ளாஸ்டிக்கெல்லாம் சாக்கடையில் போய் அடைச்சுக்கிட்டு அடுத்த வெள்ளத்தை படகு மூலம் கடக்கப் போறோம்.


Sambath
அக் 30, 2024 08:17

எங்க இந்த பிரச்சினை இல்லையோ அங்கே சென்று விடலாம்


புதிய வீடியோ