உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊர் உள்ளவரை...கார் உள்ளவரை... பாலமே பாதுகாப்பு!

ஊர் உள்ளவரை...கார் உள்ளவரை... பாலமே பாதுகாப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன் யோசனையாக இன்றே வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை மக்கள் நிறுத்த ஆரம்பித்துள்ளனர். மழையும் வெயில் இவற்றில் எது வந்தாலும் முதலில் சென்னை தான் அனைவரின் மனதுக்கும் நினைவு வரும். வெயிலுக்கும், மழைக்கும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தலைநகர் சென்னை சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் மழை காலத்தில் சொல்லவே வேண்டாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hmtk6xqz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முக்கிய பகுதிகளாக கருதப்படும் மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, போரூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் மழை வெளுத்து வாங்கினால் வீடுகள், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிய சம்பவங்கள் பல உண்டு. எனவே ஒவ்வொரு முறை மழை முன் எச்சரிக்கையின் போது சொகுசு கார்கள் வைத்திருப்போர், நகரின் ஏதேனும் ஒரு இடத்தில் உயர்ந்து காணப்படும் மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு வந்துவிடுவர்.மழை ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின்னர், சாவகாசமாக கார்களை திரும்பவும் தமது வீடுகளுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ எடுத்துச் சென்றுவிடுவர். இந் நிலையில் சென்னையில் இன்று முதலே மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை, அக்டோபர் 16ம் தேதி அதி கனமழை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் என்னும் போது 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகும்.ரெட் அலர்ட்டை வானிலை மையம் வெளியிட்டு உள்ள நிலையில் சென்னையில் கார் வைத்திருக்கும் பலரும் இப்போது வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். சிலர் இன்றே மல்டி லெவல் பார்க்கிங் உள்ள பகுதிகளில் கார்களை நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.வேளச்சேரி மற்றும் அதன் சற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், கார்களை அங்குள்ள உயரமான மேம்பாலத்தின் ஓரம் நிறுத்தி இருக்கின்றனர். பாலத்தின் ஒரு பகுதியில் கார்கள் நீண்ட தூரம் அணி வகுக்க ஆரம்பித்து இருக்கின்றன. பொருள் இழப்பையும், மன உளைச்சலையும் தவிர்க்கும் பொருட்டே இப்படி ஒரு நடவடிக்கை என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.சென்னை மக்கள் என்றுமே உஷார் என்று பலரும் கூறுவது உண்டு. அதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் கார்களை பார்க்கிங் செய்து சபாஷ் சொல்ல வைத்திருக்கின்றனர் சென்னை மக்கள்.

உரிமையாளர்களுக்கு அபராதம்

வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Mahalingam Laxman
அக் 15, 2024 09:22

It is said the bridges are safety provider to cars. But the main question is whether bridges are safe to park so many cars. It is highly doubtful of security of cars, Laxman.


குருகுமார்
அக் 15, 2024 04:01

கார் வாங்கணுமா? ஒரு மிஸ்டு கால் குடுங்க. படகுலேயே கொண்டாந்து இறக்கிடுறோம்னு வங்கிகள் காத்துக்கிட்டிருக்காங்க.


Matt P
அக் 14, 2024 22:59

மாநிலத்தின் சில துறை தலைமை அலுவலகங்களும், தனியார் தொழில் நிறுவங்களும் வெளி மாவட்ட தலைநகர்களுக்கோ சிறிய வூர்களுக்கோ நகர்ந்தால் இந்த மாதிரி நேரங்களில் மழை தாங்கும் ஷக்தியை சென்னை பெறும் இரண்டாவது உயர் நீதிமன்றமே மதுரையில் இயங்குகிறதே. இன்னும் என்ன யோசனை?


Matt P
அக் 14, 2024 22:50

மழை தாங்க முன்னேற்பாடு மத்திய அரசிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். மழை கெடுத்து மக்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானால் தான் நிவாரண நிதி மத்திய அரசிடம் கொஞ்சம் கணிசமா கேட்க முடியும். அதையும் யோசிச்சு பார்ப்பாங்க? இனிமேல் துணை முதல்வர் தான் டெல்லிக்கு எல்லாத்துக்கும் போவார் போலிருக்கு. இங்கிலீஷும் கொஞ்சம்ஓ கூடுதலோ தெரியும் இல்லையா?


Matt P
அக் 14, 2024 22:43

சென்னையில வாழும் முக்கா வாசி பேருக்கு தமிழ்நாட்டில் குமரி முதல் தாம்பரம் வரைக்கும் சொந்தகாரங்கயிருப்பாங்க. கர்நாடக ஆந்திராவிலும் வட நாட்டிலும் இருப்பார்கள் காரை எடுத்துட்டு போயிட்டு கொஞ்ச நாள் இருந்திட்டு வரலாமே. இழப்பையும் தாங்கி இழப்பு நிவாரணம் கிடைக்கும் என்றால் இப்படி சென்னையிலேயே குந்திகிட்டு இருப்பது தான் சரி. சொந்தக்காரன் இல்லத்துக்கு போனாலும் செலவுதான்னு நினைப்பவர்களும் இருப்பார்கள்.


Narayanan Sa
அக் 14, 2024 21:56

ATM மெஷின் னையே தூக்கிட்டு போற திருட்டு கும்பல் இந்த கார்களை தூக்க எவ்வளவு நேரம் ஆகும். கையால் ஆகாத திமுக அரசு ஒவ்வொரு காருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிமா. திமுக ரவுடிகளே கார்களை தூக்கி கொண்டு போயி விடுவார்கள்


Ramesh Sargam
அக் 14, 2024 20:09

கார் உரிமையாளர்களே, மிகவும் எச்சரிக்கையாக உங்கள் காரை நிறுத்தவும். திருட்டு திமுகவினர் உங்கள் காரை பார்ட் பார்ட் ஆக பிரித்து விற்றுவிடுவார்கள். மேலும் ஒரு கும்பல் அங்கு பார்க் செய்வதற்கும் பணம் வசூலிப்பார்கள். எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை.


நிக்கோல்தாம்சன்
அக் 14, 2024 19:40

சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை , ஆனால் பொருள் இழந்தவன் இழந்தது தான் , உங்களை போன்ற ஜாலராக்கள் அவர்களுக்கு இழந்த பொருளை கொடுக்க கூட யோசிக்க மாட்டீர்கள் , போங்க போயி கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு இன்னமும் வாங்கி கொடுங்க


D.Ambujavalli
அக் 14, 2024 18:43

இப்படிக் காரை பாலத்தில் நிறுத்திவிட்டு நிம்மதியாகத் தூங்க முடியுமா? அலேக்காக கார் கதவைத்திறந்துகொண்டு காரையே கிளப்பிக்கொண்டு போக எவ்வளவு நேரமாகும் ?


venugopal s
அக் 14, 2024 18:37

இரண்டு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை அந்த மாநில பாஜக அரசு கையாண்ட விதத்தை விட திறம்படவே தமிழக அரசு கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது!


சமீபத்திய செய்தி