உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெய்யென பெய்யும் மழை: எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம்

பெய்யென பெய்யும் மழை: எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், 12 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 13.6 செ.மீ., மழையும், கொள்ளிடத்தில் 13.4 செ.மீ., மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளது.https://www.youtube.com/embed/YZ-pa1GfajMஇந்நிலையில், கனமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு: மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, விழுப்புரம் மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

செல்வா
நவ 13, 2024 08:55

பெய்யென பெய்யும் மழைனா என்னனு தெரியுமா?


sundarsvpr
நவ 13, 2024 08:18

தமிழ்நாட்டிற்கு ஐப்பசி கார்த்திகை பருவ மழை காலம். சித்திரை வைகாசி வெயில் காலம். இந்த மாதங்களை ஏன் பள்ளி விடுமுறை என்று எடுத்துக்கொண்டு இதர மாதங்களை பள்ளி நாட்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது? அரசுக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூற தயங்கக்கூடாது. பெருபான்மையான மக்கள் விருப்பத்திற்குகேற்ப நிர்வாகம் தணிந்துபோகவேண்டும். அரசியல் கட்சிகள் சௌகரியத்திற்கு நிர்வாகம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை