சென்னை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டங்களில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:திருப்பூர், தொட்டம்பாளையம்- 63.2,https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9lwzftuc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சிப்பட்டி- 62.8,ராக்கிபாளையம்- 59.2,அவிநாசி- 47,குண்டடம்- 45.2,வட்டமலை கரை அணை- 44.4,உத்தம்பாளையம்- 43.2,வெள்ளகோவில் -68.4,மூலனூர் - 32,பூளவாடி- 24.8,சங்கரன்டாம் பாளையம்- 23.6, ஊத்துக்குளி- 21.5,ஊதியூர்- 20.8,கன்னிவாடி- 20.4, வள்ளியரச்சல்- 19.6, காங்கேயம்- 17.4, பல்லடம்- 15 நாமக்கல் மாவட்டம், மோகனூர்- 31,கலெக்டர் அலுவலகம்- 12.5, பரமத்தி வேலூர்- 11, தர்மபுரி மாவட்டம்
பாலக்கோடு- 31.2, பாப்பிரெட்டிப்பட்டி- 25 ,பென்னாகரம்- 23.2, நீலகிரி மாவட்டம்
அலக்கரை எஸ்டேட்- 34, பார்வுட்- 32,கீழ் கோத்தகிரி எஸ்டேட்- 31,குன்னூர்- 18,கூடலூர் பஜார் - 17,கிருஷ்ணகிரி மாவட்டம்
பாம்பார் அணை- 42 ,ஊத்தங்கரை- 25.2 ,தேன்கனிக்கோட்டை- 24, ஈரோடு மாவட்டம்
பவானிசாகர்- 21.8,சேலம் மாவட்டம்
கரிய கோவில் அணை- 45,வாழப்பாடி- 28.2 ,சேலம்- 26 ,ஆனை மடுவு அணை- 23, கெங்கவல்லி- 15,வளசரவாக்கம்- 46.8 மதுரவாயல்- 37.2,மணலி- 33.6, திருவொற்றியூர்- 20.1, தேனாம்பேட்டை- 14. 4, கோவை மாவட்டம்
மாக்கினாம் பட்டி- 71, வாரப்பட்டி- 61, சூலூர்- 58, சிறுவாணி அடிவாரம்- 30, கிணத்துக்கடவு- 20,தொண்டாமுத்தூர்- 20, அன்னூர்- 17.2,கள்ளக்குறிச்சி மாவட்டம்
கோமுகி அணை- 40,கச்சிராயபாளையம்- 39, பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்- 72, செட்டிகுளம்- 63, வேப்பந்தட்டை- 27, தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி- 44.8, வீரபாண்டி- 37.2, அரண்மனை புதூர்- 32.4 ,திருச்சி மாவட்டம்
சமயபுரம்- 54 கொப்பம்பட்டி- 50 சிறுகுடி- 42 ,வாத்தலை அணைக்கட்டு- 37.4 பொன்னையாறு அணை- 36 மணப்பாறை-25.6 முசிறி- 20திருவாரூர் மாவட்டம்
திருவாரூர்- 43, திருத்துறைப்பூண்டி- 22,கரூர் மாவட்டம்
மாயனூர்- 82.4 கிருஷ்ணராயபுரம்- 60 பஞ்சப்பட்டி- 58.6 தோகைமலை- 55 அரவக்குறிச்சி- 33 மயிலம்பட்டி- 32 கரூர் பரமத்தி- 28 குளித்தலை- 22.4 திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல்- 51 வேடசந்தூர்- 47.5 நிலக்கோட்டை- 34.4 நத்தம்- 27 பழனி -19 கொடைக்கானல்- 18 வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. லட்சத்தீவு மற்றும் கேரள பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது, படிப்படியாக வலுவடைந்து, இன்று அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகலாம். அதன்பின், புயல் சின்னமாகவலுவடையவும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பருவ மழை முன்னரே துவங்க வாய்ப்பு
கடந்த ஜூன் மாதம் துவங்கிய, தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிர மாநிலங்களில், ஓரிரு நாட்களில் விலகி விடும் என, இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகலுக்கான கால அட்டவணை அடிப்படையில், அக்., 18ல் வடகிழக்கு பருவ மழை துவங்கக் கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது, வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் சூழலை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்கள் முன்னதாக துவங்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.