உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபத்தில் ஆவின்: வானதி எச்சரிக்கை

ஆபத்தில் ஆவின்: வானதி எச்சரிக்கை

சென்னை: தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி வெளியிட்ட அறிக்கை: மாடுகள் வளர்க்கும் ஏழை, எளியவர்களிடம் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் கொள்முதல் செய்து, ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவது, தீவன செலவு அதிகரிப்பு, கட்டுப்படியாகாத விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று, மாடுகள் வளர்க்கும் ஏழை எளிய மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாடுகள் வளர்க்கும் பொருளாதாரத்தில் மிக மிக அடித்தட்டில் உள்ள ஏழை மக்களின் குரலை, அரசு கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. தொடர் நஷ்டத்தை தாங்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை விற்க தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 45 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் இருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து, அந்நிறுவனமும் செயல்பட முடியாத நிலை ஏற்படும். இது தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ஆவின் நிறுவனம் தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்தி விடும். இதனால், ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். பால் என்பது மிக மிக அத்தியாவசியமான பொருள். பால் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது சமுதாயத்தில் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். எனவே, இப்பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண வேண்டும். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தான், ஆவின் நிறுவனத்தின் உயிர்நாடி என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும். இப்பிரச்னையில், முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Santhakumar Srinivasalu
அக் 24, 2025 20:04

,இவையெல்லாம் முதல்வர் கவனத்திற்கு செல்கிறதா? / கவனிக்க வில்லையா? ஏற்கனவே விவசாயிகள் நெல் முளைப்பு பிரச்சனை!


Rajarajan
அக் 24, 2025 12:41

பிரிக்க முடியாதது எதுவோ ? அரசும், ஊழலும். அரசு வியாபாரம் செய்தால், மக்கள் பிச்சை எடுப்பார்கள் என்பது பழமொழி. சில முக்கிய துறைகள் மற்றும் வேறு சில துறைகளின் தரம்/விலை நிர்ணயம் மட்டும் அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்தால் போதும். நிர்வாகத்தை தனியார் பார்த்துக்கொள்ளட்டும். உதாரணம், பால் மற்றும் பேருந்து கட்டணம்.


Mariadoss E
அக் 24, 2025 15:46

பிரிக்க முடியாதது எதுவோ ? பிஜேபி யும் புலம்பலும்....


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 24, 2025 11:35

வானதி அவர்களே, கொஞ்சம் பொறுமை. இப்போதான் தூய்மைப்பணிக்கு நல்லதா ஒரு காண்டிராக்டர் ஏற்பாடு செய்து இருக்கிறோம். விரைவில் ஆவின் நிறுவனத்தை நடத்த கட்சிக்குள்ளிருந்தே ஒரு ஆளைத்தேர்ந்தேடுத்து ஆவினை அவர்கள் வசம் ஒப்படைப்போம். அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் திணறுவார்கள். நாங்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவெங்கும் கத்துவோம்.


KOVAIKARAN
அக் 24, 2025 09:51

குஜராத் அமுல் பாலுக்கு மாறி விடலாமா வானதி அவர்களே என தொண்டர்கள் கேட்பதாக ஒரு வாசகர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கிண்டலாகக் கேட்டாரா அல்லது தமிழக மக்களின் மீதுள்ள அக்கறையின் பேரில் கேட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், குஜராத் அமுல் பாலுக்கு மாற வேண்டாம். குஜராத்திலுள்ள அமுல் நிறுவனம் போன்ற ஒரு மாடல் அமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்தலாம். அதனால் பால் கறக்கும் மக்கள் மட்டுமின்றி, பொது மக்களும் நல்ல விதத்தில் பயன் அடைவார்கள். உங்களுக்கு முதலில், அமுல் நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்று தெரியுமா? அது எவ்வாறு உலகம் முழுவதும் அவர்களின் பால் பொருட்களை அனுப்பும் அளவிற்கு வளர்ந்தார்கள் என்று தெரியுமா? அதற்கு குரியன் போன்ற தன்னலமற்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். வானதி அவர்கள் கூறியது 100% உண்மை.


duruvasar
அக் 24, 2025 09:08

கவின் இருக்க பயமேன் .


VENKATASUBRAMANIAN
அக் 24, 2025 08:10

இதுதான் திராவிட மாடல். தனியார் களை ஊக்கப்படுத்துகிறது. குஜராத்தில் அரசும் சேர்ந்து நடத்துகிறது. ஆனால் இங்கே அரசு தூங்குகிறது. கர்நாடகாவில் நந்தினி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


T.sthivinayagam
அக் 24, 2025 07:07

குஜராத் அமுல் பாலுக்கு மாறி விடலாமா வானதி அவர்களே என தொண்டர்கள் கேட்கிறார்கள்


சமீபத்திய செய்தி