உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்ன பூச்சாண்டி... என்ன பயமுறுத்தல்...

என்ன பூச்சாண்டி... என்ன பயமுறுத்தல்...

- துர்வாசர் -திருப்பரங்குன்றத்தில், எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்துள்ளது. ஐந்தாயிரம் போலீசார் குவிப்பு இல்லை; 144 தடை உத்தரவு இல்லை; 500 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படவில்லை. மலையில் அருகில், 200 பேர் தர்காவில் தொழுகை. தீபம் ஏற்ற பிற மதத்தினரின் எதிர்ப்பு இல்லை. இந்து விரோத அரசியல் தலைவர்களின் கூப்பாடு இல்லை. ஒரு உத்தரவு, 2 முன்னாள் நீதிபதிகள், 50 பேர் பங்கேற்புடன் நுாற்றாண்டு காலமாக காத்திருந்த இந்துக்களின் கனவு நிறைவேறியது.கடந்த தி.மு.க., ஆட்சியிலும், இந்த த.வெ.க., ஆட்சியிலும் காட்டிய பூச்சாண்டிகள்... காசு கொடுத்து, 'டிவி' விவாதங்களில் தீபத்துக்கு எதிராக கிளம்பிய ஊடக கூலிப்படையினரின் கூவல்கள்... இது 'அயோத்தி அல்ல; வெள்ளைத்தாடி மண்; கைத்தடி மண்' என்ற வலைதள புலிகளின் வாய்ச்சவடால்கள் ஏதும் இன்று(நவம்பர் 28) இல்லை; 'அயோத்தி போல கலவரம் ஏற்பட விடமாட்டோம்' என, 'பாபு'க்களும், 'குமார்'களும் அள்ளிவிட்ட பேட்டிகள் தான் எத்தனை; எல்லாம் வெத்து வேட்டுகளாகின. எவ்வித எதிர்ப்பும், சிறு சலசலப்பும் கூட இல்லாமல் மிக அமைதியாகவே நேற்று நடந்தேறியது, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் நிகழ்வு. இதை, கோர்ட் உத்தரவுப்படி கடந்த ஆட்சியிலேயே நிறைவேற்றியிருந்தால் தி.மு.க.,வுக்கு, 'இந்து விரோதிகள்' பட்டம் வந்திருக்காது.திருப்பரங்குன்றத்தில் இன்று( நவம்பர் 28), 'முருகனுக்கு அரோகரா' கோஷம் தவிர வேறு எந்த குரலும் இல்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழும் தமிழகத்தில், ஒரு சிலரின் பூச்சாண்டி முயற்சிகள் எல்லாம் இன்று பிசுபிசுத்து போயின. சுப்ரீம் கோர்ட் உத்தரவை உதாசீனப்படுத்தியதற்கு ஆட்சியாளர்களுக்கு அவமானமே மிஞ்சியது.இனி, வருங்காலத்தில் எல்லாம் அமைதியாகவே நிகழும். இதே கோஷ்டிகள் அடுத்த கார்த்திகை தீபத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வரை. இன்று தீபமேற்றும் நிகழ்வு அமைதியாக நடந்தேற காரணமானவர்களும், ஒத்துழைப்பு நல்கியவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை