உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்ன ஒரு அதிசயம்: தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு!

என்ன ஒரு அதிசயம்: தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எதிர்க்கட்சியினர் விமர்சனம் காரணமாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாலும், கவர்னரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது தமிழகம் முழுவதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.,- பா.ம.க., -அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, நேற்று (ஜன.,07) தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுத்தது எப்படி என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். ஆனால் பா.ம.க.,வினர் ஒரு படி மேலே சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.'கவர்னருக்கு எதிராக ஆளும் கட்சியினர் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதியளித்து விதிமீறலில் ஈடுபட்ட, மாநகர போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ம.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கவர்னரை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சியினர் விமர்சனத்தை எதிர்கொள்வதற்காகவும், உயர் நீதிமன்றத்தில் பதில் சொல்வதற்கு வசதியாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Kanns
ஜன 09, 2025 13:20

Sack& Punish this Divisive-Destructive-MegaLoot Conspuratorial PowerMisusing Ruling Alliance& their Stooge Police


Nandakumar Naidu.
ஜன 09, 2025 06:46

இது ஒரு கண்துடைப்பு நாடகம். இவனுங்களைப்பற்றி தெரியாதா? சில நாட்கள் கழித்து வழக்கு வாபஸ் ஆகிவிடும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 08, 2025 14:17

இதுக்கெல்லாம் காரணம் நம்ம சினிமா அடிமைத்தனம் தான். சினிமாவை பார்த்து அதே போல் நடப்பது டிவி சீரியல் பார்த்து அதே போல் நடப்பது. சினிமா டிவி எல்லாம் நிஜம் என்று நாம் நினைப்பதால் அதே பாணியில் திராவிட மாடல் அரசும் நடந்து கொள்கிறது.


Natarajan Ramanathan
ஜன 08, 2025 12:43

உண்மையில் கைது செய்ய வேண்டியது போலீஸ் மந்திரியை. அவனை விட்டுவிட்டு வேறு யாரை எல்லாமோ கைது செய்து நாடகம் ஆடுகிறார்கள்.


Indhuindian
ஜன 08, 2025 12:33

இதெல்லாம் சும்மா லோலோளங்காட்டியும்


Ramesh Sargam
ஜன 08, 2025 12:11

இது ஒரு அதிசயமும் இல்லை, மண்ணும் இல்லை. ஊரை ஏமாற்றும் செயல். மக்களின் காதில் பூ சொருகும் செயல். இப்படித்தான் அதிசயம் என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். மானிட ஜென்மங்களே திருந்துங்களடா .....


Anbuselvan
ஜன 08, 2025 11:17

இதில் ஒரு அதிசயமும் இல்லை. பயம்தான். பாமக நீதிமன்றத்துக்கு சென்று விட்டதால் எங்கே நீதிமன்றம் அரசை அதன் அதிகாரிகள் மூலம் ஆஜராக சொல்லி விடுவார்கள் என்கிற பயம்தான். ஆனால் ஏன் அனுமதி அளித்தீர்கள் என நீதிமன்றம் கேட்க கூடும். பார்ப்போம் நீதிமன்றம் கேட்கிறதா என.


Ganesh Subbarao
ஜன 08, 2025 12:22

திமுக போட்ட பிச்சையில் நீதிபதி ஆகியிருந்தால் ஏன் அனுமதி கொடுத்திய்ங்கன்னு கேக்க மாட்டார்கள்


Sankare Eswar
ஜன 08, 2025 11:09

போலீஸ் ஸ்டேட்.. தமிழகத்தில் பொம்மை ஆட்சி..தமிழகம் விளையாட்டு திடலாகவும், மக்கள் பந்துகளாகவும் ஆய்விட்டார்கள்.


Rajasekar Jayaraman
ஜன 08, 2025 10:38

இநுகூட செய்யவில்லை என்றால் மஹா கேவலமாகிவிடும்.


Ramanujadasan
ஜன 08, 2025 10:37

எங்கே அணைத்து குண்டர்களையும் கைது செய்து , 15 நாள் காவலில் வைக்கட்டும் . இந்த வழக்கு உண்மை தான் என ஒத்து கொள்வோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை