ரூ.15,000 கோடி என்னாச்சு?
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருப்பவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 40 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. தி.மு.க., அரசு இழைத்த அநீதியால் இந்த போராட்டம் நடக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள், 30 ஆண்டுகளாக பணியில் இருந்து சேமித்த தொகையை தர வேண்டும். பி.எப்., கிராஜுவிடி என மொத்தம் 15,000 கோடி ரூபாய் அவர்களுடையது. இதை அரசு எடுத்துக் கொண்டு தர மறுக்கிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தந்த வாக்குறுதியை , கடுகளவும் நிறைவேற்றவில்லை . இந்த போராட்டத்துக்கு, முதல்வர் பதிலளிக்காவிட்டால், வேலை நிறுத்தம் நடைபெறும். - சவுந்தரராஜன் தலைவர், சி.ஐ.டி.யூ.,