உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளச்சேரியில் வெள்ளம் எதனால்?

வேளச்சேரியில் வெள்ளம் எதனால்?

சென்னை: வேளச்சேரி ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயை இணைத்து, மூடு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் துார்வாரும் வகையில் நுழைவு எதுவும் அமைக்கவில்லை. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அதில் இணைத்துள்ள வடிகால்கள் வழியாக வெள்ளம் பின்னோக்கி பாய்கிறது.இதன் காரணமாக, டான்சிநகர், அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தெருக்களில் வழக்கத்தைவிட அதிகமாக வெள்ளம் தேங்கியது. கழிப்பறை நிரம்பியதால், சிறுநீர் கழிக்கக்கூட மிகவும் சிரமப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bm7hwt93&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வண்டலுார் பூங்கா இன்று மூடல்

அதீத கனமழை காரணமாக, அறிஞர் அண்ணா வண்டலுார் உயிரியல் பூங்கா, பார்வையாளர்களுக்கு இன்று திறக்கப்படாது என, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rasheel
அக் 17, 2024 12:05

குளங்கள் எல்லாம் குட்டை ஆனது தான் காரணம். ஆதம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை குளங்கள் எல்லாம் அரசியல் முதலைகளால் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு நிறவப்பட்டு விட்டன. எனவே வீடுகள் எல்லாம், குளங்கள் ஏரிகளாக மாறிவிட்டன.


Mettai* Tamil
அக் 16, 2024 10:36

அந்த 4000 கோடி ?


ஆரூர் ரங்
அக் 16, 2024 10:35

1960 களிலேயே காமராஜர் காலத்தில் முதலாவது வீட்டுவசதி வாரிய திட்டக் குடியிருப்பு வேளச்சேரி ஏரியில் கட்டப்பட்டது. அது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது.


Parthasarathy Badrinarayanan
அக் 16, 2024 08:49

காசிமணி திராவிடிய ஜால்ராவோ


Lion Drsekar
அக் 16, 2024 08:48

ராமாயணம் மஹாபாரதம் கதையை எப்போது கேட்டாலும் அதே கதைதான் , அதுபோல்தான் இன்றைய நிலை, ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பிரமுகர்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு , படை சூழ பார்வையிடும் போட்டோ, வீடியோ , மக்களுக்கு கொசுவழங்கும் திட்டம் , இதை நான் உள்ளவில்லை, மன்னராக மேயர் சொல்லியிருக்கிறார், ஆக "கத கேளு கத கேளு நெஜமான கத கேளு சுவையோடு சுகமாக உருவான கத கேளு, " பாடல் நினைவுக்கு வருகிறது வந்தே மாதரம்


Sankare Eswar
அக் 16, 2024 08:43

திருடாதே திராவிட மாடல் புரட்சிகரமான வடிகால் கட்டுமர கட்டமைப்பு .


raja
அக் 16, 2024 08:13

இது இல்லை காரணம் சின்னவனின் ஜி சதுரம் ரியல் எஸ்டேட் கட்டிய தொகுப்பு வீடுகள் தான் என்று செய்திகள் வருகிறதே....


VENKATASUBRAMANIAN
அக் 16, 2024 07:54

காசுக்கு ஓட்டு போட்டால் அனுபவிக்க வேண்டும்


Devanand Louis
அக் 16, 2024 07:49

அந்த 4000 கோடிகள் எங்கு சென்றது என்பதை இப்பொழுது சென்னை மக்கள் புரிந்துகொண்டனர் . குடும்ப அமைச்சர்கள் மற்றும் அல்லைக்கை அமைச்சர்கள் மற்றும் lipstick அழகி கூட்டாக கொள்ளைக்கூடாரமாக சென்னையில் 4000 கோடிகளை பகிர்ந்து கொள்ளை .வடிகால் பணிகளில் ஒன்றும் செய்யவில்லையென்பது சென்னை மக்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது . அண்ணாமலையின் DMK பைல்கள் அனைத்தையும் புரட்டிப்பார்க்கும் நேரம்வந்துவிட்டது


Kumar
அக் 16, 2024 07:33

அவ்வளவு பெரிய வேளச்சேரி ஏரியை ஒரு சிறு குளம்போல் இன்று ஆக்கிவிட்டனர். மழை தண்ணி அந்த ஏரிக்கு போக வழி இல்லாமல் அப்படியே தேங்கி விடுகிறது. நான் ஆதம்பாக்கத்தில் 1970 முதல் வாழ்ந்து வருகிறேன். 1970/1980/1990 களில் நான் பார்த்த ஏரி இன்று ஒரு சிறு குட்டையாக இருக்கிறது. 50 வருடமாக இந்த பாழாப்போன திராவிட கட்சிகள் அவ்வளவு பெரிய ஏரியை ஆக்ரமிப்பு செய்து விட்டு இன்று குத்துதே குடையுதே என்று கூறுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை