உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் நடந்தது என்ன? அ.தி.மு.க.,வினரிடம் வேலுமணி உற்சாகம்

டில்லியில் நடந்தது என்ன? அ.தி.மு.க.,வினரிடம் வேலுமணி உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றிருந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, நேற்று சட்டசபைக்கு உற்சாகமாக வந்தார்.சட்டசபையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் காலை டில்லி சென்றார். அதேநேரத்தில், சபை நடவடிக்கைகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேலுமணி, முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். சபை நடவடிக்கைகள் முடிந்ததும், அன்று மாலையில் டில்லிக்கு விமானத்தில் பறந்தனர். அமித்ஷாவை பழனிசாமியுடன் சென்று சந்தித்தனர்.இந்த சந்திப்பு முடிந்து, டில்லியில் இருந்து வேலுமணி, முனுசாமி நேற்று காலை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக சட்டசபைக்கு வந்தனர். எதிர்க்கட்சி கொறடா என்ற அடிப்படையில், வேலுமணிக்கு, முன்வரிசையில் இருக்கை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், சட்டசபைக்கு வந்ததும், பின்வரிசைக்கு சென்று, மூத்த எம்.எல்.ஏ.,க்களுடன் அமர்ந்து, டில்லியில் நடந்த விவரங்களை வேலுமணி விளக்கினார். அந்த தகவல்களை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஆர்வமாக கேட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Yasararafath
மார் 27, 2025 09:51

எஸ்.பி வேலுமணி ஏதாவது பணம் உதவி கேட்டு இருப்பார்


R.RAMACHANDRAN
மார் 27, 2025 06:48

இந்த நாட்டில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே ஆள்பவர்களும் அதிகார அமைப்புக்களும் உள்ளன.


Appan
மார் 27, 2025 06:23

பாவம் அதிமுக .இவர்களையே இவர்கள் காப்பாற்ற முடியவில்லை .பின் எப்படி நாட்டை ஆள முடியும் ?. இப்போ தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது . அதிமுக சும்மா இருந்தாலே வெற்றி பெறுவார்கள் .அதை விட்டு பிஜேபி காலில் விழுந்தால் இவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். . எம்ஜியார் ஏழைகளுக்காக வாழ்ந்தார். . ஆனால் இப்போதைய தமிழகம் ஏழைகள் குறைந்து விட்டார்கள். அரசாங்க அறிக்கை படி தமிழகத்தில் ஏழைகள் வெறும் 3% சதம் தான் . புதிய தமிழகத்தை அறிந்து செயல்பட வேண்டும். அதிமுகவில் ஒருவராவது அறிவாக பேச முடியுமா ?. இப்படி பட்ட கட்சியை வைத்து ஆட்சிக்கு வர முடியுமா ?.பாவம் அதிமுக .


N Annamalai
மார் 27, 2025 05:43

வெற்றிக்கு முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது .இனி அனைவரும் பார்த்து பேச வேண்டும்.


vadivelu
மார் 27, 2025 03:35

நல்லது நடக்கட்டும்.


Velan Iyengaar
மார் 27, 2025 03:27

இந்த தளத்துக்கென ஒரு தனித்துவம் இருக்கு..


Velan Iyengaar
மார் 27, 2025 03:25

தமிழக ஏக்நாத் ஷிண்டே ...


Velan Iyengaar
மார் 27, 2025 03:23

இவரை எல்லாம் சேர்த்துக்கொண்டு தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போகுதா ???


Velan Iyengaar
மார் 27, 2025 03:21

இவர் ஒரு புல்லுருவி ....இவர் போன்ற ஆசாமிகளால் தமிழக நலன் கெடுகிறது .....


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 27, 2025 08:05

புல்லுருவி எவ்ளோ மேல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை