உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன

7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 7 பேர் பலியாயினர். இதனால் பலியானவர்களின் மைலோடு கிராமே சோகத்தில் மூழ்கியது.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மைலோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் 68. கட்டட மேஸ்திரி. இவர் திருநெல்வேலி அருகே டக்கரம்மாள்புரத்தில் வசித்தார். இவரது மகன் ஜோபர்ட் 40. திருச்சியில் வங்கி ஒன்றில் பணிபுரிந்தார். விடுமுறையில் ஜோபர்ட் மனைவி அமுதா 35, மகள்கள் ஜோபினா 8, ஜோகனா 8, மகன் ஜோகன் 2, ஆகியோருடன் திருநெல்வேலி தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்க்ரெட் மேரி 60, மற்றும் ஜோபர்ட் குடும்பத்தினர் 7 பேரும் சொந்த ஊரான தக்கலை சென்று விட்டு மாலை காரில் திருநெல்வேலி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தனிஸ்லாஸ் ஓட்டினார். திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலை நாங்குநேரி தெற்கே தளபதி சமுத்திரம் கீழூர் பகுதியில் தனிஸ்லாஸ் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலியில் இருந்து கார் ஒன்று நாகர்கோவில் சென்றது. திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் 36, அந்த காரை ஓட்டினார். அந்த காரில் மாரியப்பனின் மனைவி அன்பரசி 32, மகன்கள் பிரவீன் 10, அஸ்வின் 8 மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணவேணி 40, மகள் பிரியதர்ஷினி 20, மகன் சுபிசந்தோஷ் 18, மற்றும் உறவினர் அக்சயா தேவி, பெரியவர் மில்கிஸ் 60, ஆகியோரும் பயணித்தனர்.நேற்று முன் தினம் மாலை 4:30 மணியளவில் தளபதி சுமுத்திரம் கீழூர் அருகே மாரியப்பனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் வந்து கொண்டிருந்த தனிஸ்லாஸ் கார் மீது நடுவில் மோதியது. இதில் அந்த காரில் பயணித்த தனிஸ்லாஸ், அவரது மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகிய 6 பேரும் பலியாயினர். மற்றொரு பேத்தி ஜோகனா 8, நாகர்கோவிலில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். மற்றொரு காரிலிருந்த மில்கிஸ் 60, பலியானார்.மாரியப்பன் ஓட்டிய காரில் 9 பேர் இருந்துள்ளனர். முன் சீட்டில் இடது ஓரத்தில் மில்கிஸ், நடுவில் ஒரு சிறுவனும் இருந்துள்ளனர்.சிறுவன் இருந்ததால் கார் ஓட்ட மாரியப்பன் நெருக்கடியில் சிரமப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்புற சீட்டில் டிரைவர் உட்பட மூன்று பேர் இருந்ததை நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். அதிக பயணிகளுடன் சென்ற மாரியப்பன் அருகிலேயே நெருக்கடியாக சிறுவனையும் உட்கார வைத்துக்கொண்டு கார் ஓட்டியது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

India our pride
மே 01, 2025 20:47

இந்தியாவில் தயாரிக்கப்படும் சில வெளிநாட்டு தகர டப்பா கார்கள், நேர் மற்றும் சைடு கிராஷை தாங்க முடியாத நிலையில் உள்ளன. லாப நோக்கத்தில் தயாரிக்கப்படும் கார்கள், தனது அதிகமான வேகத்தை மட்டும் கார் கம்பெனிகள் குறைப்பதில்லை. Airbags இருந்தால் சில பேர் பிழைத்து இருக்கலாம்.


Manivannan
மே 01, 2025 12:42

நெடும்சாலையின் நடுவில் உள்ள மீடியன்கள் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் எதிர் திசையில் செல்ல முடியாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். இப்போது இருக்கும் மீடியன்கள்லால் ஒரு பயனும் கிடையாது.


Jawa
ஏப் 29, 2025 14:38

மாரியப்பன் கார் ஸ்விப்ட் டிசையர் மற்றொரு கார் இன்னோவா


Jayaraman Sekar
ஏப் 29, 2025 13:48

அப்படி வேகமாகப் போகிறவர்களை மன்னிக்க வேறு வகையில் சொல்ல முடியவில்லை தாங்கள் செத்துப் போனால் தவறில்லை... ஆனால் இங்கே மீடியனை தாண்டி எதிரில் வந்த ஒரு அழகான குடும்பத்தை அல்லவோ சிதைத்து விட்டான் இந்த மாரியப்பன்....


Apposthalan samlin
ஏப் 29, 2025 11:59

கார் 120 கிலோ மீட்டர் ஸ்பீடில் போய்க்கொண்டு இருந்தது வரும் பொழுது சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்கள் நெல்லையப்பர் கோயிலுக்கு போயிட்டு வரும் பொழுது மாரியப்பன் தூங்கி விட்டார் இதனால் தான் கார் சென்டர் மீடியண்ணை தாண்டி அடுத்த பக்கத்தில் போய் விபத்து ஏற்பட்டு உள்ளது முழு தவறு மாரியப்பன் ஆனால் மாரியப்பன் பிழைத்து கொண்டான் .


Chola
ஏப் 29, 2025 10:45

எந்த கார்னு செய்தி போட்டா மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு


Chola
ஏப் 29, 2025 10:43

கொடுமையான செய்தி. மாரியப்பன் போன்றோரின் பொறுப்பற்ற செயலால் அழகான குடும்பமே சிதைந்து விட்டது..


ديفيد رافائيل
ஏப் 29, 2025 09:18

Car ல போறவனுங்க எல்லாருமே speed போறது கெத்துன்னு நினைச்சு drive பண்றானுங்க. Any vehicles speed போனாலே நாம் நினைக்கும் இடத்தில் brake பிடிக்க முடியாது, அந்த சமயத்தில் Car கட்டுப்படுத்த முடியாது இப்படி தான் சாகனும். Speed போனா death ஆகனும் கண்டிப்பாக.


புதிய வீடியோ