உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி அப்படியே உள்ளது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 'பேட்ச் வொர்க்' மாடல் முதல்வர் ஸ்டாலினுக்கு, சில புள்ளி விபரங்களை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2020 - 21 ஆண்டின் தொழில்துறை கணக்கெடுப்பின்படி, முதல் ஐந்து மாநிலங்களின் பங்கானது, தமிழகம் 15; குஜராத் 12.7; மஹா ராஷ்டிரா 12.3; உத்தரப்பிரதேசம் 6.8; கர்நாடகா 6.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.இதில், உத்தர பிரதேசத்தில் வேலைவாய்ப்பின் வளர்ச்சி 1.2, மஹாராஷ்டிராவில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2020-21 போல், 2023 - 24ம் ஆண்டிலும், வேலைவாய்ப்பின் பங்கு அப்படியே உள்ளது.பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட 6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது; தொழில் துறை பதிவுகளில் அது எங்கு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், ஐ.இ.எம்., அதாவது, தொழில் துறை தொழில் முனைவோர் மெமொரண்டம் வாயிலாக, தமிழகத்திற்கு 37,307 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.அதே நேரத்தில், குஜராத்திற்கு 2,89,110 கோடி; மஹாராஷ்டிராவுக்கு 1,65,655 கோடி; உத்தர பிரதேசத்திற்கு 56,900 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. பிற மாநிலங்கள் எல்லாம் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேறிக்கொண்டிருக்க, தமிழகம் பின் தங்கி உள்ளது. ஆனால், கடந்த கால பெருமைகளை பேசுவதில், தி.மு.க., அரசு கவனம் செலுத்தி வருகிறது; மாநிலத்தின் எதிர்காலம் குறித்த, தொலை நோக்கு பார்வையை இழந்து விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

Ambedkumar
செப் 05, 2025 12:10

2024-25 இல் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்று தம்பட்டம் அடிப்பது இருக்கட்டும். கடந்த 4 ஆண்டுகளில் 2021 -2015 தமிழகத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 8.6 % மட்டுமே. இது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவு. பீகார் 9.59 % மேகாலயா 9.54 % அஸ்ஸாம் 9.05 %, மகாராஷ்டிரா 8.99 %, உத்தர பிரதேஷ் 9.15 %. தமிழகம் 6 ஆவது இடத்தில்


S.V.Srinivasan
செப் 02, 2025 08:06

அது கோபாலபுரம் லாக்கர்ல பத்திரமா இருக்குங்க.


rama adhavan
ஆக 30, 2025 20:50

எஸ் வி சேகர் ஒரு படத்தில் துபாய் போனது போலவா இது?


V RAMASWAMY
ஆக 29, 2025 18:08

இந்த அழகில் தான் இப்படிப்பட்ட பேசிச்சு "தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்"


BALAJI
ஆக 29, 2025 17:02

அண்ணாமலை உங்க லண்டன் முதலீடு என்னாச்சி


திகழ்ஓவியன்
ஆக 29, 2025 19:05

அதை நீங்கள் செந்தில் பாலாஜி தம்பி கிட்ட தான் கேட்கணும்


Thravisham
ஆக 29, 2025 21:49

200 ரூவா குவாட்டர் அடிச்சுட்டு ஒளரி கொட்டாதே. போய் தூங்கு


panneer selvam
செப் 05, 2025 22:32

Balaji , Annamalai went to UK to study on modern trend in politics . It is a short term course . You can also go there to study .


Yaro Oruvan
ஆக 29, 2025 14:15

தெரிஞ்சா சொல்ல மாட்டானுவலா போங்க சார்.. நாங்க அடுத்து முப்பெரும் விழா நடத்தி டுமிலர் பெருமை காப்போம் ..


Ravichandran
ஆக 29, 2025 13:54

Thinking of investing when $ comes down to Rs.55/- as assured.


vivek
ஆக 29, 2025 13:47

நம்புங்க அப்பு... தமிழ்நாட்டுக்கு பத்து லட்சம் கோடி.....இங்கே ஒரு உலகமாக உருட்டு. ஹி ஹி


திகழ்ஓவியன்
ஆக 29, 2025 13:34

வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வது உசிதம்


Mettai* Tamil
ஆக 29, 2025 14:55

முதலில் தமிழ்நாட்டில் இந்து விரோத ஊழல் கட்சியை ஒழித்துவிட்டு , வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வது உறுதி ....


pakalavan
ஆக 29, 2025 13:21

15 லட்சம் என்னானது, சரி அதை விடு, கருப்பு பனம் மீட்பு என்ன ஆச்சு ?


vivek
ஆக 29, 2025 13:37

30000 கோடி குடுதாச்சி. அங்கே போய் வாங்கிக்கோ


Kumar Kumzi
ஆக 29, 2025 14:56

ஹிந்தியும் தெரியாது இங்கிலீசும் தெரியாது போயி ஹிந்தி படிச்சிட்டு மோடி ஹிந்தியில் என்ன சொன்னாருன்னு கேட்கலாம்


Mettai* Tamil
ஆக 29, 2025 15:01

70 வருஷ கருப்பு பணம் கண்டிப்பாக பிஜேபி யால் மட்டும் தான் மீட்க முடியும் ..உங்க நம்பிக்கை வீண் போகாது ....


Vijayasekar
ஆக 31, 2025 08:08

பகலவன் இவனுக்கு மூளையில இருட்டு. முரசொலி மூர்க்கன் மாதிரி இருக்கு. 200 ரூவா பார்ட்டி யா? இல்ல பொது சொத்து களவாணிய? எதுவானாலும் டம்ளக் காரன் ஓடம் பொறப்பு ? ஆம் ஓடம் பொறப்பு


Ramalingam Shanmugam
செப் 02, 2025 13:07

பப்பு மாதிரி பேசுற முதலில் 5000 வாங்கு


புதிய வீடியோ